உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

12. தனித்தமிழ் மாட்சி

பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றைய வெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறா யிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக், கல்லாதவர் எல்லாந் தூய்தாய் வழங்கிவர, அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலை குலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுஞ் செயலினுஞ் கொடியதாய் இருக்கின்றது.

66

இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித் தமிழ் எழுதுவாரைக், குறுகிய மனநிலை”, “அறியாமை”, “பேதைமை” யுடையரென இகழ்ந்து பேசிவிடுகின்றனர். கொள்கை யளவில் ஒருவரொடு மற்றொருவர் மாறுபட்டிருப்பதுபற்றி, அவர் மற்றவரைக் “குறுகிய மனநிலை யுடையவர்” எனவும், “அறியாமை”, "பேதைமை" மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடை யார்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங் கொண் கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து, இதனைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும், “அறிதோ றறியாமை கண்டற்றால்” என நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/119&oldid=1584327" இலிருந்து மீள்விக்கப்பட்டது