உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

93

சொற்களைச் சேர்க்க வேண்டி வந்தக்கால், அதன் இயல்புக்குப் பொருந்தினவற்றையே சேர்த்தல் அழகுடைத்தாம்; அவ்வாறன்றி அதன் இயற்கைக்கு மாறானவற்றையும், மாறாகாவிடினும் அளவுக்கு மிஞ்சிய அயல்மொழிச் சொற் களையும் அதன்கண் வலிந்து புகுத்தல் அதன் நலத்தைக் குறைப்பதொடு தமிழறிவு மிக்க சான்றோர்க்கு நகையினையும் விளைக்கும் ஆதலால், அயல்மொழிச் சொற்களை உருவு திரியாமற் சேர்த்தலும், உருவு திரிந்தவற்றையும் அளவுக்கு மிஞ்சிச் சேர்த்தலும், ஒரு சிறிதும் பொருந்தாவென்று கடைப்பிடித்துணர்க. அங்ஙனமாயின், தமிழ்ச்சொற்கள் இயற்கையொலியுடையவாதலும், மற்றை மொழிகள் இயற்கைக்கு மாறான செயற்கையொலி யுடைய வாதலும் எவ்வாறெனின், அவ்வேறுபாட்டைத் 'தமிழின் யெழுத்துக்கள்' என்ற கட்டுரையில் விளக்கிக் காட்டி யிருக்கின்றோம்; ஆண்டுக் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/118&oldid=1584326" இலிருந்து மீள்விக்கப்பட்டது