உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் -17

திரிபுபடுத்தாமல், இனிய மெல்லிய தமிழ்ச் சொற்களின் இடையே அவற்றை அங்ஙனமே எழுதினால் அவை, தமிழின் னிமையிலும் அருமையிலும் பழகினார்க்கு எவ்வளவு அருவருப்பாய்த் தோன்றுகின்றன! தேனும் பலாச்சுளையுங் கலந்து அருந்துவார்க்கு, அவற்றிடையே முட்கள் விரவியிருந்து அஃது எவ்வளவு துன்பத்தினையும்

நாவிற்றைத்தால்

வறுப்பினையுந் தருமோ, அதுபோலவே வேண்டா வழக்காய் உருவு திரியாமல் தமிழில் வரையப்படும் வேற்று மொழிச் சொற்கள் உண்மைத் தமிழ் அறிஞர்க்குப் பெரியதொரு வருத்தத்தினையும் அருவருப்பினையும் விளைக்கின்றன. எவ்வகைப் பொருளையும் எத்தகைய கருத்தையுந் தெரிவித்தற்கு எண்ணிறந்த தமிழ்ச் சொற்கள் இருப்பவும், அவற்றைப் புறந்தள்ளி மற்றைமொழிச் சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலே ஒரு பெருங் குற்றமாம்; அதன் மேலும், இயற்கைக்கு மாறாய் வருந்திச் சால்ல வேண்டும் அவ்வயல்மொழிச் சொற்களை, இயற்கையோடொத்து மெல்லென நடக்குந் தமிழ்ச் சொற்களி னிடையே சேர்த்துக் கூறுதல் அதனினும் பெரியதொரு குற்றமாம். அஃதல்லாமலும், வயிற்றிற்கு இடப்பட்ட உணவுப்பொருள்கள் தமது உருவு திரிந்து உடம்பிற்கு வேண்டும் பாலாக மாறாமல், அவை அங்ஙனமே வயிற்றினுட் கிடந்தால், அவை அவ்வுடம்பிற்குச் சிறிதும் பயன்படாமையோடு அவ்வுடம்பினையும் பழுது படுத்துமன்றோ? அது போலவே தமிழின் தன்மைக்கு ஏற்ப உருவு திரியாமல் எழுதப்படும் வடசொற்கள் முதலியனவும், பயன்படாது போதலொடு தமிழின் அழகையுஞ் சிதைவு படுத்தா நிற்கின்றன. மேலும் இயற்கை யழகாற் சிறந்த ஒரு நங்கைக்கு அவளது இயற்கை யழகு ஒன்றுமே அமையும்; அன்றி அவட்கு வேறு ஆடை யணிகலன்கள் அணிந்து பார்க்க ே வேண்டினும், அவளது அழகிற்குப் பொருத்தமான சிலவற்றைத் தெரிந்தெடுத்து அவளை ஒப்பனை செய்வதே வாய்ப்புடைத்தாம்; அங்ஙனமின்றி அவளது நலத்திற்குப் பொருந்தாதவற்றையும், பொருந்துமேனும் அளவிற்கு மேற்பட்ட ஆடையணிகலத் தொகுதிகளையும் அவள் மேல் இடுதல் அவளது ஒப்புயர்வற்ற அழகைக் குறைப்பதோடு காண்பார்க்கும் நகையினைத் தரும். இங்ஙனமே இயற்கை நலம் நிரம்பிய தமிழுக்குஅதன் நலம் ஒன்றுமே அமையும்; அன்றி இன்றியமையாது வேற்றுமொழிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/117&oldid=1584324" இலிருந்து மீள்விக்கப்பட்டது