உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

வவ

91

வேறுபாடு ஒன்று கொண்டே நன்கு தெளியலாம். இன்னும் இவ்விந்தியாவில் இப்போது வழங்கிவரும் பல மொழிகளுள் ஒன்றன் சொற்கள் மற்றொன்றில் கலக்குங்கால் அம்மற்ற மொழியின் றன்மைக்கு இசையவே அவை திரிந்து வழங்குதலை அவ்வம் மொழியிலும் ஆராய்ந்து பார்த்துத் தெளியலாம். இவ்வாறு ஒரு மொழியின் சொற்கள் மற்ற மொழியில் அதன் றன்மைக் கேற்பத் திரிந்து வழங்கும் இயற்கை கண்கூடாய் அறியப்பட்டுக் கிடத்தலின், தமிழிலும் பிறமொழிச் சொற்கள் தமிழுக் கேற்றவாறு திரிந்து வழங்கல் பெரிதும் பொருத்த மாவதே யாம். ஒரு மொழிச் சொற்கள் வேறொரு மொழியில் அங்ஙனந் திரிந்து வழங்க வேண்டுவதுதான் என்னை? அவற்றைத் திரிபுபடுத்தாமல் உள்ளபடியே வைத்து வழங்குதலால் வரும் இழுக்கு என்னை? எனின், உலக வழக்கில் நடைபெறும் ஒவ்வொரு மொழியும் உயிரோடு உலவும் உடம்பு போல்வதாக லானும், உடம்பு நிலைபெற்றிருந்து வளர்தற்பொருட் அதற்கு இடும் பல்வேறு உணவுப் பொருள்களுந் தந்தன்மை திரிந்து அவ்வுடம்பின் றன்மையோடு ஒத்து ஒன்று பட்டால் அல்லாமல் அவ்வுடம்பு நிலைபெற்று வளராமைபோல, உயிரோடு உலவும் ஒரு மொழியிற் போந்து கலக்கும் பிறமொழிச் சொற்கள் அம்மொழியோ டொத்துத் திரிந்து அதனோ டொன்றுபட்டு நின்றலல்லது அம்மொழி வளராமையானும், ஒரு மொழியில் ஏனை மொழிச் சொற்கள் திரிந்து காணப்பட வேண்டுவது இன்றியமையாத இயற்கையேயாம் என்க. இவ்வியற்கைக்கு மாறுபாடு இல்லாமலே தமிழ் மொழியின் கண்ணும் வேற்று மொழிச் சொற்கள் தமிழிற்கேற்பத் திரிந்து காணப்படுகின்றன.

திங்ஙனமாகவும், இப்போது சில ஆண்டுகளாகப் பார்ப்பனரில் தமிழிலே நூல் எழுதுவார் சிலரும் அவரைப் பின்பற்றின வேறு சிலரும் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் மிகுதியாகக் கொண்டுவந்து தமிழில் வலிந்து புகுத்துவதோடு, அவற்றைத் தமிழுக்கேற்பத் திரிபு படுத்தாமல் அம்மொழியில் உள்ளபடியே எழுதுகின்றார்கள். ஜ்ஞானம், ம்ருகம், ப்ரகாசம் முதலியனவாக மேலெடுத்துக் காட்டிய வடசொற்களையும், க்ளாஸ், பாட்ல், க்ரைஸ்ட் முதலான ஆங்கிலச் சொற்களையுந் தமிழுக்குப் பொருந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/116&oldid=1584322" இலிருந்து மீள்விக்கப்பட்டது