உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

து

மறைமலையம் -17

அவ்வாறன்று, வடமொழி உலக வழக்கிற் பெண்டிரானும் பிள்ளைகளானும் பேசுதற்குப் பொருந்திவராத உரத்த ஓசைகளுங் கனைக்கும் ஒலிகளும் உடையதாய்ப், பெயர் னைகளில் உயர்திணை அஃறிணைப் பாகுபாடுகள் உலக இயற்கையில் அமைந்தபடியாக இல்லாமற் செயற்கையாக வலிந்து வகுக்கப்பட்டு, ஊன்றிப் பயில்வார்க்கும் பேருழைப் பினையும் பெருவருத்தத்தினையும் தருவதா யிருத்தலின் அஃது எல்லாரானும் பேசப்படாததனை ஒரு குற்றமாகச் சொல்லுதல் ஆகாதெனின், இது குற்றமோ அன்றோ என்பதனை இங்கு முடிபு கட்டப் புகுந்திலம். உலக வழக்கிற் பெண்டிர் சிறார் முதலான எத்திறத்தாரானும் பேசுதற்கு இயைந்த எளிய தன்மையுந், தன்னைக் கற்பார்க்கு இனியவாய்க் காணப்படும் இயற்கைப் பொருத்த முள்ள சொன்முடிபு பொருண்முடிபுகளும் வாய்ந்து பல்லாயிர ஆண்டுகளாக இளமை குன்றாமல் வழங்கி வரும் அருமை பெருமை மிக்க செந்தமிழ் மொழியில் வேண்டா கூறலாய் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கொண்டுவந்து நுழைத்தல் பெரிதுங் குற்றமாவதாம் என்பதனையே இங்கே விளக்கப் புகுந்தோம்.

இனி, இன்றியமையாது வேண்டப்பட்டுத் தமிழில் வந்து கலக்கும் அயல்மொழிச் சொற்கள் தமிழிற் பொருந்துதற்குரிய இயல்பினையுஞ் சிறிது ஆராய்ந்து காட்டுவாம். தமிழில் வந்து கலக்கும் ஆரியம் ஆங்கிலம் முதலான அயல் மொழிச் சொற்கள் தம் தன்மை திரிந்து தமிழோடொத்துத் தமிழினுருவத்தைப் பெற்று இயல்பாக வழங்கி வருகின்றன. ஜ்ஞாநம், ம்ருகம், ஸ்தலம், ரங்க, ரம், பிரகாசம், ப்ராசி, சக்தி, ஈச்வர முதலான வட சொற்கள் தமிழில் முறையே ஞானம், மிருகம், தலம், அரங்கம், கீரம், பிரகாசம், பாசி, சத்தி, ஈசுவரன் முதலியனவாகத் திரிந்து தமிழோடொத்து நடைபெறுகின்றன; க்ளாஸ், கப், பாட்ல், பம்ப், பைபிள், ஐயோ நியன்ஸ், க்ரைஸ்ட், ஜான் முதலான ஐரோப்பிய மொழிச்சொற்கள் தமிழில் முறையே கிளாசு, கோப்பை, போத்தல், வேம்பா, விவிலியம், யவனர், கிறித்து, யோவான் முதலியவனவாகத் திரித்துத் தமிழோ டொத்து நடக்கின்றன. இங்ஙனமே ஆரியம் தமிழ் முதலியவற்றின் சொற்கள் ஆங்கில மொழியிற் பலவாறு திரிந்து அம்மொழியின் தன்மைக் கேற்ப உலவுதலை, இவ்விந்தியாவிலுள்ள ஊர்ப் பெயர்கள் ஆங்கிலத்திற் சொல்லப்படுங்கால் திரிபடையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/115&oldid=1584321" இலிருந்து மீள்விக்கப்பட்டது