உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

89

வேறாகப்பிரிந்து அவர்களோடு தொடர்பில்லாதவராய், அவர்களால் தாமுந் தம்மால் அவர்களும் பெறும் பயன் வரவரக் குறையத், தாமுந் தம் மினத்தாருஞ் சில நூற்றாண்டு களில் தமிழுக்கு முற்றும் புறம்பாய் வேற்றினமாய் மறைந்து போவரென்பது திண்ணம். இஃது இவர்க்கே தாழ்வாய் முடியுமல்லாமற், பன்னூறாயிரம் மக்களிடையே பரவியிருக்குந் தமிழுக்கு அதனாற் சிறிதுஞ் சிறுமை வராது.

அங்ஙனமன்று, பார்ப்பன மாந்தரும் அவர்போல்வார் பிறரும் வடமொழியையே தமக்குரிய மொழியாகக் கருதி அதனையே மிகவும் பயிலுதலின் அதன் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுகின்றாரெனின், அங்ஙனம் வட மொழியினிடத்து மிகுந்த பற்றுவைத்து அதனையே பயிலும் அவர்கள் அம்மொழியைத் தம் பெண்டிர் பிள்ளைகள் முதலான எல்லார்க்குங் கற்பித்து அம்மொழியிலேயே அவருடன் பேசுதல் வேண்டும்; அதுவே அதன் பால் வைத்த உண்மைப் பற்றுதலுக்குப் பொருத்தமாகும். தமிழருடன் தமிழிற் பேச விருப்பம் இல்லாத அவர்கள், தாம் தமிழரோடு உண்ணல் கலத்தல்கள் செய்யாது அவரின் வேறுபிரிந்து தம்மை

உயர்வுபடுத்திக் காண்டது போலவும், அவர்களுள் வடமொழியை நிரம்பக் கற்றோர் சிலர் தமிழரொடு தாம் நேரே பேசுதலும் ஆகாதென்று ஓர் ஏற்பாடு செய்துகொண்டிருத்தல் போலவுந் தாமுந் தமிழையே முற்றும் பேசாதொழிதலே பொருத்தமுடைத்தாம். அவ்வாறு தங்கொள்கைக்கு ஏற்ப நடத்தலை விடுத்து, வடசொற்கள் சிலவற்றைத் தமிழொடு கலந்து பேசுதலால் மட்டுமே அவர் வடமொழிக் குரியராய் விடுவரோ? அவருட் சிலர் இப்போது ஆங்கிலங் கற்றுஆங்கிலச் சொற்களையுந் தமிழிற் சேர்த்துப் பேசுகின்றார். அதனால் அவர் ஆங்கில மொழிக்கு உரியராவரோ? ஆகாரன்றே, அது போலவே; வடமொழியைத் தஞ்சுற்றத்தார் எல்லாரோடும் முற்றும் பேசத் தெரியாத அவர் அதன்பாற் பாராட்டும் பற்று வெறும் போலியே அல்லாமல் ஏதும் பயனுடையதாகக் காணப்படவில்லை. ஆகவே, உலக வழக்கிற்குப் பயன் படாத வடமொழிமேல் வைத்த போலிப்பற்றால் வளம் நிறைந்த தூய தமிழைக் கெடுக்க முந்துதல் பார்ப்பன மாந்தர்க்கும் அவரைப் பின்பற்றினார் பிறர்க்குஞ் சிறிதும் முறையாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/114&oldid=1584320" இலிருந்து மீள்விக்கப்பட்டது