உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

97

ஆண்டு நிரம்பி முதிர்ந்து இறத்தல் உண்மையேயாயினும், ஆண்டு முதிரா நல்லிளமைப் பொழுதிலேயே நோய் கொண்டும் ஆகாப்பொருள்களொடு கலந்தும் மாய்ந்து போக எவரேனும் விரும்புவரோ? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங்கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்தவர்களுங்கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபடாத வாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும் மேலும் அதனை நலமுற வைத்து வாழ்நாளைப் பெருக்குதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவர்களுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்பப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்களுக்கு அறிவும் இன்பமும் வாயா.

அதுபோலவே, நமது செந்தமிழ்

மொழியாகிய

ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப்படு L மானால், அஃது இன்னும் பன்னூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும். சிலருடம்பு தமக்கு இயற்கை யிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மை யுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமஸ்கிருதம் இலத்தீன் கிரீக் ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியோர் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானும் இப்போது மக்களாற் பேசப்படாமல் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ் மொழியோ தனக்கு இயற்கையிலேயுள்ள வளப்பத்தானுந் தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறிவு முயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத்தன்மை குன்றாது இன்னும் உலவிவருகின்றது. சிலர் ளமையிலேயே மூத்துப் போதலையும், வேறு சிலர் முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்ததில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டு வருதல்போலவே, நமது தனித் தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ளளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ் மொழியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/122&oldid=1584331" இலிருந்து மீள்விக்கப்பட்டது