உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் -17

வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதாமன்றி, அது குன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பாலதான்று.

இனித், தமிழ் வளர்ச்சிக்கு மாறான மாறுதல் னன்றால், தூய தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச் சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல் போல,

ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தாகுதியே அம் மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கை யிலேயே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதபட்ட வுடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும் பொருட்டுக் கோலும் குறடும் கழுத்தும் போலிக் கைகால்களுஞ் செயற்கை அமைத்துக்கொள்ளுதல் போலவும்,

யாகச்

சய்து

இயற்கையிலே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளே மற்றைமொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டி நிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ் மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப் படுவதில்லை. மக்கள் இம்மை மறுமையைப் பற்றி அறிய வேண்டுவன வெல்லாம் முற்றும் எடுத்துக் கூறுந், 'தொல்காப்பியம்’, ‘திருக்குறள்' என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித் தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ்வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்றதென்றால், எல்லா வுறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, வேறு மண்ணாலும் மரத்தாலுஞ் செயற்கையாக அவ்வுறுப்புகள் போற்செய்து அவற்றை அதன்கண் ஒட்டவைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச் சொற்களை விடுத்து 'ரோமம்', 'சிகை' என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலிய வற்றை நீக்கிச் 'சரீரம்' 'சிரசு’ ‘வதனம்' என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு 'நயனம்’ ‘கர்ணம்’ ‘நாசி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/123&oldid=1584333" இலிருந்து மீள்விக்கப்பட்டது