உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

99

என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் 'கண்டம்' என்னுஞ் சொல்லையுந், தோள் கை முதலியன இருக்கப் 'புஜம்’ 'கரம்' என்பவற்றையும், வயிறு அகடு இருக்க உதரம்' 'குஷி' என்பவைகளையும், கால் அடி என்னுஞ் சொற்களுக்குப் ‘பதம்’ ‘பாதம்' என்பவற்றையுங் கொண்டு வந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ச் சொற்களாகிய உறுப்புகளை வெட்டி யெறிந்து விட்டு, அவை போன்ற ஏனை மொழிச் சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்ட விடுதலை போல்கின்றதன்றோ? பொருள்களை 'வஸ்துக்கள்’ என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் 'பிரகாச' மென்றும், ஓசையைச் ‘சப்தம்’, என்றுஞ், சுவையை 'ருசி' என்றும், மணத்தை ‘வாசநை' என்றுந், தித்திப்பு இனிப்பை ‘மதுரம்’ என்றுந், தொடுதல் உறுதலை ‘ஸ்பர்சம்' என்றுங் கல்வியை ‘வித்தை' என்றுந், தண்ணீர் சோறு உணவு என்பவற்றை 'ஜலம்’ ‘அந்நம்' ‘ஆகாரம்' என்றும், ஆடையை ‘வஸ்திரம்' என்றுங், கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்' என்றுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை 'மாதா' 'பிதா' ‘புத்ரன்' ‘புத்ரி' ‘பந்துக்கள்’ என்றுந் துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் 'கஷ்டம்’ ‘நஷ்டம்’ ‘சம்ஸாரம்' என்றுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை 'ஸ்நாநம்' 'பூஜை ‘ஆயாசம்' 'நித்திரை' என்றும், முயற்சி ஊழ்வினை உயிர் சிவம் கடவுள் என்பவற்றைப் 'பிரயத்நம்' 'விதி' 'ஆத்மா' ‘ஈசன்’ ‘பிரமம்’ என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை 'ஞாபகம்' ‘பாவநை’ ‘வசனித்தல்' என்றுந் தூய தமிழ்ச் சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பது தானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர், கூறுமின்கள்! இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிற மொழிகளி னின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்ததை எப்படி யாவது நிலைநாட்டிவிடவேண்டு மென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழி தேடுவதுதானா தமிழ் கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/124&oldid=1584334" இலிருந்து மீள்விக்கப்பட்டது