உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 17

பிறமொழியையுங் கற்கக் கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற் பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்கு வீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம் மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்.

ஆங்கிலத்தில்

வல்ல நல்லிசைப் புலவர்களான ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, டெனிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச் சொற்கள் விரவாத தூய ஆங்கில நடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதற்காக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த டெனிசன் தமது காலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து ஆண்டு அவற்றை வழங்கவிட்டமைக்காக, அவர் கற்றறிவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! ஜான்சன், கிப்பன் என்னும் உரை நூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக் முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரைநூல்களில் விரவவைத் தெழுதினமைக்காக அவர்களை அந்நன்மக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கில நூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ? ஆங்கில மொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்ஜான் என்னும் ஆசிரியர், “பழைய நாளில் ஆங்கில மக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமை யானே பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் அவர்மேற் படையெடுத்து வந்து அவர் தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுகக் கலந்துவந்தனர்" எனவும், 'அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப்பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கில மொழியிற் கலந்து நிலைபெறலாயின எனவும் மொழிக் கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டிய பின், “பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச் சொற்களை மிகக் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. 'உரோம் அரசியலின் இறக்கமுஞ் சிதையும்' என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/125&oldid=1584336" இலிருந்து மீள்விக்கப்பட்டது