உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

101

எழுதிய ஜான்சன் என்பவரும் இங்கிலாந்தின் மொழிச் சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர். கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், ஜான்சன் இருபத்தெட்டு விழுக்காடுமாக அயன்மொழிச் சொற்களை விரவவிட்டனர். ஆனாலும், உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன்மொழிச் சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். ஜான் முனிவரது நூலின் மொழி பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன் மொழிச் சொல் ஒன்றுகூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம்" என்று கூறிப் பின்னும், “பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச்சொற்களைத் தொகுதியாய்க் கொண்டுவந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது; அங்ஙனமே அவை பலவும் வந்து சேர்ந்தன; ஆனாலுந் தாம் வந்திருத்தற்கு உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்டமையுந், தாம் வேலைசெய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அது முதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குரு முதல்வரான ஜெரிமிடெய்லர் sportiveness என்னும் ஆங்கில மொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக city என்னுஞ் சொல்லையும், secret என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady's maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்ந்து வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகைய நடை பெருகிவரவே, இத்தன்மையான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கில மக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந்தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்து வதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான் என்று எழுதி, அதன் பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக் காட்டி, “ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/126&oldid=1584337" இலிருந்து மீள்விக்கப்பட்டது