உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் 17

சேர்த்து ஒரு நடை எழுதமாட்டான்” என்று அதன் பிழைகளை எடுத்துக் கூறிச், “சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை ன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும்; அயலான் ஒருவன் அச்சொற்கள் வழங்கும் நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்க வேண்டும்” என்றும், “நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடியமட்டும் விலக்குகின்றார்கள்” என்றும், “கோல்ட்சிமித், ஜேன், ஆஸ்டன், உவால்டர்ஸ்காட், மெக்காலே, ப்ரௌட், ஸ்டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரிய காலத்தே நல்ல தூய ஆங்கில நடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவான்” என்றும் முடித்துக் கூறுகின்றார். (Porf. J.M. D. Meiklejohn's The Art of Writ- ing English, pp. 121-132). இந் நல்லிசைப் புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரிமன் என்பவரும், “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச் சொற்கள் உரைநடையை உயர்வு படுத்துகின்றன வென்று பிழையாகக் கருதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட் குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டுபண்ணுகின்றன; ஆதலால், அவைகளுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எ தெனக் கண்டிருக்கின்றேன்.பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளின் முன் யான் எழுதியதைவிட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டு கொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடை யெழுதப்பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ்வுலண்மையைச் சொல்லுவது நல்லதென எண்ணுகிறேன். நடை எழுதத் துவங்குவோர் தாம் உயர்ந்த நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதுவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும்விட உண்மை யான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப் படுவதற்குப் பல ஆண்டுகளின் பழக்கம் இன்றிய மையாது வேண்டப்படும்" (Quoted in Meiklejohn's The Art of Writ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/127&oldid=1584338" இலிருந்து மீள்விக்கப்பட்டது