உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

103

ing English. P. 128) என்று ஆங்கில மொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்திப் பேசியிருக்கின்றார்.

ஆங்கில மக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக் காள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழைய நாளில், ரோப்பாவின் வடமேற்று மூலையிற்றோன்றிய சூடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானியத் தீவின்கண் வந்தது புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில்வென்று அவர் தம்மைத் தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்குப் பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரெஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் ஆங்கிலமொழியைப் பிரித்தானிய தீவினுட்கொண்டு வந்த காலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்கு மேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந் திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்த நிலையிலிருந்து பின்னர்க் காலந்தோறும் பல மொழிக் கலாப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப்பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலா தென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பலமொழிச் சொற்க ளோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க.

க்

இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்ற மட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்க வேண்டுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்தி வருகுவராயிற், பண்டை காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த் தாம் ஒருவர் கீழ் அடங்கி வாழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கிவைத்துத் தமது செந்தமிழ் மொழியையே நீண்ட காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/128&oldid=1584339" இலிருந்து மீள்விக்கப்பட்டது