உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் 17

தருவனவாய் இருத்தலின், அவரது அறிவு பெருவிளக்கம் உடையதாய், அவர் துய்க்கும் எவ்வகையின்பங்களையும் மிகவுங் கூர்மையாய்த் துய்த்தற்குரிய வழிமுறைகளைக் காட்டி அவரை எக்காலும் பெருமகிழ்ச்சியில் தோய்ந்திருக்கச் செய்யும். இனிய ஓசையையேனும் அழகிய காட்சிகளையேனுந் தீஞ்சுவை உணவையேனுங் நலஞ் சிறந்த வேறு பிறவற்றையேனும் இவ்விருதிறத்தாரும் ஒரு காலத்து ஒருங்கே துய்க்கும்போது, அறிவு நூற் கல்வியுடையார் அவற்றின் நுணுக்கங்களை நிரம்பத் தெரிந்து மிக மகிழ்தலும், உலகநூற் கல்வியுடையார் அவற்றை அங்ஙனம் உணர மாட்டாமையின் அவர் சிறிதே மகிழ்தலுங் கண்கூடாய்க் கண்டறியலாம்.

உலகநூற்

மேலும், அறிவுநூற் கல்வியுடையார் பெரிதுங் கூர்மையான அறிவுடையராதலின், அவர் தாம் விரும்பினால் தம்மினுந் தாழ்ந்த கல்வியுடையார் செய்யும் எத்திற முயற்சிகளையும் அவரைவிட எளிதாகவுஞ் செவ்விதாகவுஞ் செய்து முடிக்கமாட்டுவர். உலக நூற்கல்வியுடையாரோ தாம் எத்துணை தான் விரும்பினாலும், தம்மினும் மேம்பட்ட அறிவுநூற் கல்வியுடையார்க்குள்ள அறிவைப் பெறவாவது அவர் செய்யும் முயற்சிகளிற்றினையளவேனுந் தாஞ் செய்ய வாவது மாட்டுவாரல்லர்; எதுபோலவெனின், அரசியலைத் திறம்பட நடத்தும் மேலோனான ஓர் அமைச்சன் தன்கீழ் அலுவல் பார்ப்பார் செய்யும் முயற்சிகளைத் தான் செய்ய வேண்டினால் அவரினும் அதனைத் திறமையாகச் செய்து முடிப்பன்; அவன் கீழுள்ள ஊர்காவற்காரன் ஒருவன் அவ்வமைச்சன்றொழிலைத் தான் செய்ய விரும்பினால் அது முடியுமோ? அது போல வென்றறிந்து கொள்ளல் வேண்டும்.

அதுவல்லாமலும், எல்லா உயர்ந்த பொருள்களும், உயர்ந் தோரும், உயர்ந்த இன்பங்களுந் தமக்கு இசையாத உலக நூலறிவு முயற்சியுடையாரை, விட்டகன்று, தமக்கு இசைந்த அறிவு நூலறிவு முயற்சியுடையாரைத் தாமே வந்து அணுகு மாதலின் அறிவுநூற் கலைஞரே இம்மையிலும் எல்லா உயர்ந்த நலங்களையும் பெறுவர்; மறுமையிலும் ஏனையோர்க்கு எட்டாத பேரின்பத்தையும் பெறுவர். ஆதலால், மக்களாய்ப் பிறந்தோர் உலக நூற் கல்வியிலேயே தமது காலத்தை முற்றுங் கழித்து L ாது அறிவு நூற் கல்வியையும் மிக முயன்று பெற்றுப் பேரறிவையும் பெரு நலங்களையும் எய்துவாராக!

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/153&oldid=1584374" இலிருந்து மீள்விக்கப்பட்டது