உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் 17

யினும், பத்துப்பேர் அவர்பால் வைத்த பற்றினாலோ அல்லது அவர்பால் தாம் பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண்டாடுவராயின், அவர் எதற்காக அவரைக் கொண்டாடு கின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாட வேண்டுமென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல் உடனே அவரைக் கண் கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக் கொண்டாட்டத்தால் வருந்துன்பங்களையுந் தாம் அடைவர்.

பெரும்பாலும்,

நம் நாட்டவர் உண்மையறிவு யாராய்ச்சிகள் உடைய பெரியாரைக் கொண்டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைதற்குரிய பெரும் பயன் வெளிமினுக்கும் வெற்றாரவாரமும் உடையாரைப் பின்பற்றித் தமது நலனையுந் தம் நாட்டவர் நலனையும் இழந்துவிடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்துவிட்டது.

அடைவதுமில்லை.

இனி, மேல் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் என்னவென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும் அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து, எது தழுவத் தக்கதோ அதைத் தழுவுவர்; தழுவத் தகாததை விலக்குவர் வெறும் வெளிமினுக்கையும் வெற்றாரவாரத்தையும் கண்டு அவர்

ஏமாந்து விடுவதில்லை.

அறிவிலும் ஆராய்ச்சியிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவதால், அவர்கள்பால் வீணான எண்ணங்களும் வீணான பேச்சுக்களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் ஆராய்வதில்லை; பிறர்பாலுள்ள குணங்களை மட்டும் ஆராய்ந்து, அவற்றுக்காக அவரைப் பாராட்டுவதுடன், அவரால் தாமும் உலகமும் பயன்படுதற்கான ஒழுங்கு களெல்லாஞ் செய்வர். அதனால், மேல் நாட்டவரில் நற்குணமும் நல்லறிவும் நன்முயற்சியும் உடையவர்கள் சீருஞ் சிறப்பும் எய்தித் தாமுந் தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும் கவலையும் இன்றி உயிர் வாழப்பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமை களையும் ஆயிரக்கணக்கான பொறிகளையும் (இயந்திரங் களையும்) ஆயிரக்கணக்கான தொழிற் சாலைகளையும் ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும் ஆயிரக்கணக்கான சொற்பொழிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/155&oldid=1584376" இலிருந்து மீள்விக்கப்பட்டது