உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

131

மண்டபங்களையும் ஆயிரக் கணக்கான கலையறிவுக் கழகங்களையும், இன்னும் இவை போல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலன்களையும் தாமிருக்கும் நாடுகளிற் பரவச் செய்து வருவதோடு, தாஞ் செல்லும் பிறநாடுகளிலும் அந்நலன்களையெல்லாம் பரப்பி வருகின்றனர்.

இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்ச்சி யில்லாமை யோடு ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை. தமக்குத் தம் மனைவி மக்களும் நெருங்கிய உறவினருமே உரியரெனவும், மற்றையோரெல்லாந் தமக்கு வேறானவரெனவுந், தாமும் தம்மினத்தவரும் நன்றாயிருத்தலே வேண்டும், தம்மவரல்லாத பிறர் எக்கேடு கெட்டாலென்ன எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர் நலத்தைச் சிறிதுங் கருதாதவர்களாய் இருக்கின்றனர்.

தமக்கு

தன்னலங்கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத்தமிழ் நாட்டவர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளுங் கணக்கிட்டுச் சொல்லல் இயலாது. நாலுபேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிப் பேச்சும்; பெண் கொடுக்கல் வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதாம் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர்கள் கையில் தண்ணீர்கூட வாங்கமாட்டோம் என்னும் பேச்சும்; அதைவிட்டால் பொருள் தேடும் வகைகளைப் பற்றிய பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் ய சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப்பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனாற் குறிகேட்கலாம்? எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் வை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கறுப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலை மாடனைக் கும்பிடலாமா? என்னுஞ் சிறுதெய்வச் சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்; தனக்குப் பகையானவனைப் பலவகையால் இழித்துத் தன்னைப் பலவகையால் உயர்த்துச் செருக்கிப் பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/156&oldid=1584377" இலிருந்து மீள்விக்கப்பட்டது