உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

❖ LDM MLDMOELD -17 •

பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கின்றோம். புகை வண்டிகளிலும் இந்தப் பேச்சே,பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரைகளிலும் இந்தப் பேச்சே.

இதைத்தவிர நாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம்? நாம் இப்பிறவியிற் செய்ய வேண்டுவன யாவை? நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் (மிருகங்களுக்கும்) உள்ள வேற்றுமை என்னை? நம்மையும் மற்ற எண்ணிறந்த உயிரிகளையுந் தோற்றுவித்தது யாது? இந்த உலகங்கள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன? இவைகளையெல்லாம் படைத்த பேரறிவுப் பொருளின் நோக்கம்

யாதாய்

இருக்கலாம்? நாம் இறந்தபின் எந்த நிலையையடைவோம்? பொருள் தேடுவதும், உண்பதும், உறங்குவதும், மருவுவதுந் தவிர, வேறு நாம் செய்யத் தக்கதும் தகாததும் இல்லையா? என்று இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்க்கத் தக்கவர்களை நம்மில் நூறாயிரவரில் ஒருவரைக்கூடக் காண்பது அத்திப்பூத்தாற்போல் இருக்கின்றதே!

ஆனால், மேல்நாட்டவர்களிலோ இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்ப்பவரும், ஆராய்ந்து எழுதுபவரும், ஆராயுங் கழகங்களும், அவர்களாலும் அக்கழகங்களாலும், எழுதி வெளியிடப்பட்ட - வெளியிடப்படுகின்ற நூல்களும், நாள் வெளியீடுகள் கிழமை வெளியீடுகள் திங்கள் வெளியீடுகளும், அவை தம்மைக் கற்பாரும், கற்பிப்பாரும், இவ்வகை கட்கெல்லாம் கோடி கோடியாகத் தமது பொருளை வழங்கு வாரும் எண்ணிக் கையிலும் அடங்குதல் இல்லை.

மேல்நாட்டவர்கள் பசியெடுத்த வேளையில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அங்கே அதனைப் பெற்று மகிழ்ச்சியோடு உண்பர்; தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெளியப்படுகின்றனரோ, அவரை அங்கே மணந்து கொள்வர். உடம்பைப் பற்றிய

வ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக் கொண்டு, அதற்குமேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத்தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மேன்மேற் பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும் புதிய புதிய பொறிகளையும் புதிய புதிய உண்மைகளையுங் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/157&oldid=1584378" இலிருந்து மீள்விக்கப்பட்டது