உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

133

பிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர்.

6

மற்று, நம் நாட்டவரோ மேலே காட்டியபடி நிலை யில்லாமல் அழிந்து போகுந் தமது உடம்பைப் பற்றியும், அவ்வுடம்பால் வந்த தொடர்புகளைப் பற்றியுமே எந்நேரமும் பேசியும் நினைந்தும் வருவதல்லாமல், என்றும் நிலையாக இருக்கத்தக்க தமது அறிவு விளக்கத்தைப் பற்றியாதல், நம் அன்பையும் அருளையும் வளர்க்குங் கடமைகளைப் பற்றியாதல் பேசியும் எண்ணியும் வரக் காண்கின்றோம் இல்லையே!

இன்னும், நமது வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவன கல்விப்பொருளுஞ் செல்வப்பொருளும் என்னும் இரண்டுமேயாகும். கல்விப்பொருளைப் பெற்றவர்கள், தமக்கும் பிறர்க்கும் நன்மையைத் தருந்துறைகளை ஆய்ந்து பார்த்துக், காலத்தின் நிலைக்கும் இடத்தின் நிலைக்கும் ஒத்த முயற்சிகளைச் சோம்பாது செய்வார்களாயின், அவர்கட்குச் செல்வப்பொருள் தானே வரும்.

6

வெறுஞ் செல்வம் மட்டுந் தமது பழவினைப் பயத்தால் வாய்க்கப் பெற்றவர்கள் அங்ஙனங் கல்விப் பொருளை எளிதிலே பெற்றுக் கொள்ளுதல் இயலாது. மேலும் கல்விப் பொருள் என்றும் அழியாது; செல்வமோ சில காலத்தில் அழிந்து போம்; கல்விப் பொருள் ஒருவனது அறிவைப் பற்றிக் கொண்டு எழுமை எழுபிறப்பும் அவனுக்கு உற்ற துணையாய்ச் செல்லும்; செல்வமோ அதனையுடை யானுக்கு இந்தப் பிறவியிலேயே துணையாகாமற், பிறராற் கவரப்பட்டு, ஒரோவொருகால் அவனுயிரையுந், பிறராற் கவரப்பட்டு, ஒரோவொருகால் அவனுயிரையுந் தொலைத்தற்கு ஏதுவாயிருக்கும்; கல்விப் பொருள் இந்த உலகத்திலும், இங்குள்ள உயிர்களிலும் உள்ள வியப்பான உண்மைகளை விளங்கச் செய்வதுடன், இவற்றிற்கு உள்ளுமாய்ப் புறம்புமாய் நிற்கும் இறைவன்றன் அருளுண்மை களையும் விளங்கச் செய்து நமக்குப் பேரின்பத்தைத் தராநிற்கும்; செல்வப் பொருளோ தன்னையுடையானைப் பெரும்பாலுந் தீய துறைகளிற் புகுத்திச் சில காலத்தில் அவன் சிற்றின்பத்தினையும் நுகரவொட்டாமல் அவனை நோய்வாய்ப்படுத்தி அவனை விட்டு நீங்கி அவனை விரைவில் மாய்க்கும் ஆகையாற், கல்விப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/158&oldid=1584379" இலிருந்து மீள்விக்கப்பட்டது