உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் -17

சிறந்ததோ, செல்வப் பொருள் சிறந்ததோ என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்!

கல்விப் பொருள் ஒன்றுமே நமக்கும் நம்மைச் சேர்ந்தார்க்கும் நலம் பயப்பதன்றிச் செல்வப்பொருள் அங்ஙனம் நலம் பயப்பதன்றென்ப து சிறிதுணர்வுடையார்க்கும் விளங்குமன்றோ? ஆகவே, கல்விப் பொருளின் பொருட்டுச் செல்வப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமேயல்லாமற், செல்வப் பொருளைப் பெறும் பொருட்டே கல்விப் பொருளைப் பயன்படுத்துதல் ஆகாது.

ஆனால், நம் நாட்டவர் நிலை எத்தன்மையாயிருக்கின்ற தென்பதை எண்ணிப் பாருங்கள்; நம்மவரிற் பெரும்பாலர்க்குக் கல்வி கற்பதிற் சிறிதும் விருப்பமேயில்லை. கற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுந் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தாற் போதுமென்றும் அதுவும் வேண்டாங் கையெழுத்துப் போடத் தரிந்தாற் போதுமென்றும் எண்ணி அங்ஙனமே நடப்பவர்களாய் இருக்கின்றார்கள். இன்னும் பலர், “தமிழ் படித்து என்ன வாரிக் காள்ளப் போகின்றான்? படியாதவர்களில் எத்தனையோ பேர் பொருள் தேடிச் செல்வர்களாயில்லையா?” என்று வாய் கூசாது பேசிப் போகின்றனர். இன்னும் பலர், “ஆங்கிலம் படித்தாலும் பெரிய வேலை கிடைக்கும். பெரிய அதிகாரங் கிடைக்கும், ஆங்கிலம் படித்துப் பட்டம் வாங்கின மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் பத்தாயிரத்துடன் பெண் கிடைக்கும்” என்று எண்ணுவதுஞ் சொல்லுவதுஞ் செய்து, இவைகளுக்காகவே தம் மக்களை ஆங்கிலம் பயிலச் செய்கின்றார்கள்.

துவக்கத்திலிருந்தே இந்த எண்ணத்தோடு ஆங்கிலங் கற்கின்ற பிள்ளைகள், அதனில் தேர்ச்சி பெற்றுப் பட்டங்கள் வாங்கினவர்களாய் வெளிவந்தவுடன் பொருள் வருவாய்க்கு இசைந்த வேலைகளைப் பெறுவதிற் கண்ணுங் கருத்தும் உடையராகின்றார்களேயல்லாமல் மேலும்மேலும் கல்வி யறிவைப் பெருக்க வேண்டுமென்னும் எண்ணம் உடைய வராகக் காணப்படவில்லை. அரசியற் துறைகளிலோ, நீராவி நிலையங்களிலோ, ஆங்கில வணிகர்தந் தொழிற்சாலைகளிலோ, இன்னும் அவை வை போன்ற பிறவற்றிலோ பெரிய பெரிய அலுவல்களில் அமர்ந்து பிறர்க்கும் ஊழியஞ்செய்து பொருள் ஈட்டுவதிலேயே பெருமுயற்சியுடையவர்களாய் இருக்கின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/159&oldid=1584381" இலிருந்து மீள்விக்கப்பட்டது