உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

135

இவ்வலுவல்களைப் பெறும்பொருட்டு அவற்றிற்குத் தலைவர் கேட்கும் அளவெல்லாந் தாழ்ந்து கொடுக்கின்றார்கள்;

களாயிருப்பவர்கள்

கைக்கூலியுங்

அதுமட்டோ, அத்

தலைவர்கள் விரும்புகிறபடியெல்லாம் மானக்கேடான செயல்களைச் செய்வதற்கும் முன் நிற்கின்றார்கள்!

பொருள் வருவாயையுந் தலைமையையுமே பெரியவாக நினைத்து, இவ்வாறெல்லாம் பெரும் பாடுபட்டுத், தாம் விரும்பிய வேலைகளை அடைந்த பிறகாவது, இவர்கள் எண்ணங் கல்விப் பயிற்சியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்வதிலும் நாட்டுக்கு நலந்தேடுவதிலுந் திரும்புகின்றதோ வென்றால், இல்லை, இல்லை தாமிருக்கும் வேலையினளவுக்கு வருஞ் சம்பளத்தில் மனநிறைவு பெறாமல், தாம் தமக்கு மேலுள்ளவர்கட்குக் கைக்கூலி கொடுத்தது போலவே தாமுந் தமக்குக் கீழுள்ளவர் பாலுந் தமது தலைமைக்குக் கீழ் அடங்கி நடக்கும் ஏழை எளியவர்கள் பாலுமிருந்து ஓயாமற் கைக்கூலி வாங்கின வண்ணமா யிருக்கின்றார்கள்.

அங்ஙனம் ஏழை எளியவர்கள் அழஅழ அவர்கள் வயிற்றில் அடித்துச் சேர்க்கும் பொருளையாவது அவர்கள் நல்வழியிற் சலவு செய்கின்றார்களோவென்றால் அதுவு மில்லை. இரப்பவர்களுக்கு ஒரு கைமுகந்த அரிசிதானுங் கொடுக்க இசையார்; கற்பவர்க்குங் கற்றவர்க்கும் ஒரு காசுதானுங் கொடார். மற்றுந், தம் மனைவி மட்கட்குப் பொற்சரிகை பின்னிய பட்டாடைகள் வாங்கிக் கொடுப்ப திலும், வைரம் இழைத்த உயர்ந்த அணிகலன்கள் செய்வித்து அணிவதிலும், அவர்கள் புழங்குவதற்குப் பொன் வெள்ளிகளிற் சமைத்த ஏனங்கள் வாங்கிச் சேர்ப்பதிலும், அவர்களுந் தாமும் ஏறி ஊர் சுற்றுவதற்குக் குதிரை வண்டிகள் இவற்றினும் விலையுயர்ந்த உந்து வண்டிகள் (Motor Cars) அமைத்துக் கொள்வதிலும், நாடக சாலைகள் குதிரைப் பந்தயங்கள் வட்டக் காட்சிகள் (Circus) சென்று காண்பதிலும் இன்னும் இவை போன்ற வெற்றார வ வாரங்களிலுமாகத் தாம் ஏழைக் குடி மக்களிடமிருந்து பகற்கொள்ளையடித்த பெருந்தொகையான பொருளைச் செலவு செய்து விடுகின்றார்கள்.

இன்னும் பலர், சாராயங் குடித்தும், ஊன்தின்றும், வேசியரை மருவியும் அப்பொருளைப் பாழாக்குகின்றார்கள்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/160&oldid=1584382" இலிருந்து மீள்விக்கப்பட்டது