உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் -17

மற்றும் பலர், அப்பொருளைக் கடன் கொடுத்து வட்டிமேல் வட்டி வாங்கியும், அம்முகத்தால் ஏழை எளியவர்களின் நிலங்கள் வீடுகள் பண்டங்களைக் கவர்ந்துந் தமது பொருளை ஆயிரம் நூறாயிரங்கோடி என்னும் பேரளவாகப் பெருக்கு வதிலேயே முனைந்து நிற்கின்றார்கள்.

வ்வாறாக ஆங்கிலங் கற்கும் இந்நாட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாங் கற்ற கல்வியைக் கருவி யாக்கி, ஏழைக் குடிமக்களைப் பாழாக்குகின்றார்கள். இந் நிலையிற் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ஒத்தவர்களாகவே யிருக்கின்றார்கள். தந்நலந் தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள், அவைக் களங்களில் மேடை மேலேறிப் பேசும்போது மட்டும் ஏழை மக்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறுகின்றார்கள்! இஃது எதனை ஒத்திருக்கிற தென்றால்,“ஆடு நனைகிறதேயென்று ஓநாய் குந்தியழுததையே” ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு இரக்கங்காட்டிப் பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழையிரவலர்கள் சென்றால் அவர்களை ஏசித் துரத்துகின்றார்கள்.

இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக் கொடியராயிருக்கின்றார்கள். யாங்ஙனமென்றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள், தம்மினத்தவரல்லாதார்க்கு ஏதோருதவியுஞ் செய்யாவிடினுந் தம்மினத்தவர்களில் ஏழை களாயிருப்பவர்க்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர் நிலைகளிலிருப்பவர்களோ ஏழைக்குடிகட்கு ஏதொரு நன்மையுஞ் செய்யக் காண்கிலேம்; நன்மை செய்யா தொழியினுந் தீமையேனுஞ் செய்யாதிருக்கின்றார்களோ வென்றால், அப்படியு மில்லை; எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் "தோலிருக்கச் சுளை விழுங்குவது" போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை சலுத்தலாம்!

செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங் களில் முறையிடச் செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின், அங்கும் நடுவிழந்து ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஓர் ஆங்கிலர் நடுவராயிருப்பின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/161&oldid=1584383" இலிருந்து மீள்விக்கப்பட்டது