உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

137

அவரால் எத்திறத்தவரும் முறையாக வழக்குத் தீர்க்கப்பட்டுத் தங்குறை தீர்கின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் இருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவாக வழக்குத் தீர்க்கப்படுதல் இல்லை; அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது. இதனினும் பெருங் கொடுமையா திருக்கின்றது! காவலாக இட்ட வேலியே பயிரைத் தின்றால் பயிர் ளைவதெப்படி?

இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைத்து நடுவு தவறி எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கிலங் கற்ற நம்மனோர், பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு இவ்வாறெல்லாந் தீங்கிழைப்பினும், பார்ப்பனர் காலில் விழுவதற்கும் அவர்க்குத் தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கு மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகின்றார்களில்லை.

இவர்கள் ஆங்கிலங் கற்றது வயிற்றுப் பிழைப்புக்கும் பெ ருமைக்குமே யல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழுமிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண்மக்களின் சொல்லுக்கும், ஆராய்ச்சியில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித், தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வரவழைத்து, அவர்க்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின்றார் கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும் L பசியுமாய்க் கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாராமற், பேதைமை வயப்பட்டு, வறுமையறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டுகட்குஞ், சிறு தெய்வ வெறியாட்டு கட்கும், அழிவழக்குகட்குந் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை, எண்ணுந்தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது!

னி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும், பழைய நல்வினைப் பயனாற் பெருஞ் செல்வர்களாகவுஞ், சிற்றரசர்களா கவும் வாழ்வார் நம் நாட்டில் பெருந்தொகையாய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச் செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யுங் கொடுமை களையும் நாம் எண்ணிப் பார்ப்போமானால், நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்காநிற்கும், செல்வர்கள் இல்லங்களில் இருக்கும் பொற்சரிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/162&oldid=1584385" இலிருந்து மீள்விக்கப்பட்டது