உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் -17

பின்னிய பட்டாடைகளிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லிழைத்த நகைகளிலும், அவர்கள் புழங்கும் பான் வெள்ளி ஏனங்களிலும், அவர்கள் ஏறிச்செல்லும் ஊர்திகளிலும், இன்னும் இவை போன்ற வளிமினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக் கணக்காயிருக்கும்.

னிச், சிற்றரசர்களாகிய ஜமீன்தார்களின் அரண் மனைகளிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணிகலங்கள் முதலியவற்றிலும் மடங்கி வறிதே கிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை கணக்கில் அடங்கா.

ங்ஙனமே, சைவவைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக் கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங் கணக்கில் அடங்கா.

நி

இவ்வாறெல்லாம் இவர்கள் கையில் முடங்கிக் கிடந்து அவியும் பெரும் பொருட் குவியல்களெல்லாம் இவர்களை விட்டு நீங்கிப், பொதுமக்கட்குப் பயன்படு நிலைமையை யடையுமானால், இவ்விந்திய நாட்டில் வறுமையும் நோயுங் அறியாமையுந் தலைகாட்டுமா?

L

இப்பெரும் பொருள் கொண்டு நூறாயிரக் கணக்கான கல்விச் சாலைகளை நாடெங்குந் நாடெங்குந் திறப்பிக்கலாம். மிக வறியராயிருப் பவர்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு காடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழை யெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத் தாழில் கைத்தொழில்களை அறிவாராய்ச்சியோடு செய்து இப்போது பெறும் பயனிலும் நூறு மடங்கு ஆயிர மடங்கு மிகுதியான பயனைப் பெறலாம். வாணிகத்திற் பொய்யும் புரட்டுங் கலவாமல் அதனை நேர்மையோடு சய்து பேரூதியத்தையடையச் செய்யலாம்.

இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகைவண்டித் தொடர்கள், மின் வண்டிகள், வானவூர்திகள் முதலியனவெல்லாம் அமைத்துக் கொள்ளலாம். நீர்வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/163&oldid=1584386" இலிருந்து மீள்விக்கப்பட்டது