உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

139

நீர்ப்பீலிகள் எடுப்பிக்கலாம். பொது மக்கட்கு அறிவு ஊட்டுங் கழகங்கள் நிலைபெறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்தலாம்; அவர்கள் கடவுளைப் பற்றியும் உலகியற் பொருள்களைப் பற்றியுங் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலையாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந்தெழுதும் நூல்களுக்குத் தக்கபடி பொருளுதவி புரிந்து, அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம். ஆண்டுகடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை கொண்டு போகுங்கொடிய நோய்களை வராமற் றடைசெய்து மக்கள் வாழ்நாளை நீளச்செய்து அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம்.

எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் தோற்றுவித்து உயிர்கட்கு ஓயாமற் பேருதவி செய்துவரும் ஒரே முழுமுதற் கடவுளான ஒரு பெருந்தந்தையை அறியாமற், பிறந்து பெருந்துன்பப்பட்டு இறந்த மக்களையும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையும் தெய்வங்களாக நினைந்து வணங்கும் பெருங்குற்றஞ் செய்வதோடு, வாயற்ற தீங்கற்ற ஏழையுயிர்களாய் ஆடு மாடு கோழி முதலியவைகளைத் துடிதுடிக்க அறுத்து, அவற்றை அத்தெய்வங்களுக்குப் பலியாக ஊட்டி மீளா நரகத்திற்கு ஆளாகும் நம் பொதுமக்களை அத்தீமையினின்று விடுவிக்கலாம். சாதியென்றுங் குலம் என்றும் வரையறுத்துக் காண்டு சிறுவர் சிறுமிகளை அளவிறந்த துயரக் கடலில் அமிழ்த்திவரும் கொடிய செயல்களையொழித்து, அறிவும் நற்குணமும் நற்செயலும் அன்பும் உடையாரை ஏதொரு வேற்றுமையும் இன்றி ஒருங்கு கூட்டி வாழச் செய்யும் மக்கட் கூட்டுறவு மன்றங்கள் (Social Service Leagues) எங்கும் நிலை பெறுத்தலாம். ஒரு முழுமுதற் கடவுளை எல்லாருந் தடையின்றிச் சென்று வழிபட்டு மகிழுந் திருக்கோயில்கள் எங்கும் எடுப்பிக் கலாம். இன்னும் நம் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய இன்னும் எத்தனையோ உயர்ந்த ஏற்பாடுகளை யெல்லாஞ் செய்விக்கலாம்.

இவ்வளவு நலங்களுக்கும் பயன்படுவதற்குரிய கோடி கோடியான பெரும் பொருட் குவியல்கள், நம் நாட்டுச் செல்வர்களிடத்துஞ் சிற்றரசர்களிடத்தும் அரசர்களிடத்தும் மடத்தலைவர்களிடத்துஞ் சிறிதும் பிறர்க்கும் பயன்படாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/164&oldid=1584387" இலிருந்து மீள்விக்கப்பட்டது