உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

6

155

தனிப்பிறவியெடுப்பது நன்றாகமாட்டாது. எந்தக் காலத்திலும் ஒரு மகன் பிறர் உதவியையுந் துணையையுந் நாடாமல் உயிர்வாழ்தல் முடியாது.

ஒருவன் தாயின் கருப்பையிலிருந்து பிறக்குங்

காலத்திலேயே முழு அறியாமை உள்ளவனாயும், பிறகு சிறிது சிறிதே வளர்ந்துவருங் காலங்களிளெல்லாம் பிறருடைய சேர்க்கையாற் சிறிது சிறிதாக அறிவு விளங்கப் பெற்று வருஞ் சிற்றறிவு உடையவனாயுந், தனக்கு வேண்டும் ஊண் உடை முதலான எல்லாப் பொருள்களையும் பிறரது முயற்சியாற் பெற வேண்டிய வனாயுந், தனக்கு வேண்டும் வசதிகளைத் தான் தேடிக்கொள்ள முயலும்போது தான் பலருடைய உதவியையும் துணையையும் நாடவேண்டிய வனாயுந் தனது சிறு வாழ்நாளின் இடையிடையே தான் நோயாற் பற்றப்பட்டு வீழ்தலின் அக்காலங்களிலெல்லாம் இவன் தனக்கு நோய் தீர்ப்பார் பேருதவியைக் கட்டாயம் விரும்பி நிற்ப வனாயும் இருத்தலால் ஒரு மகன் தனது துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அறிவுக்கு மெல்லாம் பிறரைச் சார்ந்தவனாகவே யிருக்கின்றான்.

இங்ஙனம் பிறரைச் சார்ந்தே உயிர் வாழும் நிலையிலுள்ள ஒரு மகனுக்கு எல்லா வகையிலும் உதவியுந் துணையுமாய் நிற்கத்தக்கவர்கள் எவர்கள்? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், தன் உடம்போடு தொடர்பு உடையவர்களேயல்லாமல், மற்றவர்கள் அல்லரென்பது நன்கு விளங்கும். தன்னைப் பெற்ற தாயுந் தந்தையுந், தன்னோடு பிறந்த அண்ணன் தம்பி அக்கை தங்கைமாருந், தன்னைச் சேர்ந்த மனைவியுந், தன் வயிற்றிற் பிறந்த தன் பிள்ளைகளுந் தன்னிடத்து அன்பு பாராட்டி உதவியுந் துணையுமாய் நிற்றல்போல் உடம்பின் தொடர்பு இல்லாத மற்றவர் அங்ஙனம் இயற்கையான அன்பு காட்டி ஒருவனுக்குச் சார்பாய் நிற்றல் அரிதினும் அரிது. பிறர்க்கு நாம் எவ்வளவு பொருளைக் கொடுத்தாலும் எவ்வளவு உதவியைச் செய்தாலும் நமக்குப் பெரிய இடுக்கண் வந்த காலத்தில் அவர் நம்மை விட்டு நீங்குவர். இது பற்றியன்றோ ஒளவைப் பிராட்டியார்,

66

“அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/180&oldid=1584411" இலிருந்து மீள்விக்கப்பட்டது