உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

66

16. உடன் பிறந்தார் ஒற்றுமை

“நீறில்லா நெற்றிபாழ் நெய்இல்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக் கழகுபாழ் - மாறில்

உடற்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை.

ஔவையார்

‘உடன் பிறந்தார்' என்னுஞ் சொல் ஒரே வயிற்றிற் கூடப் பிறந்தவர் என்னும் பொருளைத் தருவதாகும். தலைப்பில் எடுத்துக்காட்டிய ஔவையார் திருப்பாட்டின்கட் ‘பகைமை இல்லாத உடன் பிறப்பாளர் இன்றித் தனியே பிறக்கும் பிறப்புப் பயனற்றதாகும்' என்பது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.படவே, அன்பினால் அகங்கலந்து அளவளாவும் உடன்பிறந்தார் கூடப் பிறந்த பிறவியே பயன் உடைத்தாமென்பதும், பகைமைக் குணங்கள் உள்ளாருடன் பிறப்பது பெருந்துன்பத்திற்கே இடமாமென்பதும் நன்கு பெறப்படும். பொல்லாதாருடன் பிறப்பது பெரிதுந் துன்பந் தருவதென்பதனை இந்தப் பாட்டின்கண் மறைவாகக் கூறினாராயினும்.

“உடன்பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு”

என்னும் மற்றொரு பாட்டில் அதனை கூறியிருக்கிறார், அது நிற்க

விளக்கமாகக்

இனிப், பகைமைக் குணங்கள் உள்ளாருடன் பிறப்பதிலுந், தன்னந்தனியே பிறப்பது நன்றன்றோவெனின், தனியராய்ப் பிறந்தால் உலக வாழ்க்கையில் அடுத்தடுத்துக் கிளைக்கும் பலவகை அல்லலிற்பட்டுத் தனியே உழல வேண்டி வருமாதலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/179&oldid=1584409" இலிருந்து மீள்விக்கப்பட்டது