உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

157

பிறந்தாரேயாவார் என்பது முடிக்கப்படும். இங்ஙனம் உடன்பிறந்தார் மட்டுமே தனக்கு உறுபெருந் துணையும் உதவியுமாய் நிற்றலால், நல்ல தமையன் தம்பியரை இல்லாப் பிறவி பயனற்றதென்று ஔவையார் அருளிச் செய்வராயினார். நல்ல உடன்பிறப்பைப் பெறுதல் எவற்றினும் அரிதென்பதும், அத்தகைய உடன்பிறப்பைப் பெற்றவனுக்கு ஆகாதது

ஒன்றுமில்லையென்பதும் சீவகசிந்தாமணியிலும்,

66

உணர்த்தும் பொருட்டே

"திண்பொருள் எய்தலாகுந் தெவ்வரைச் செகுக்கலாகும், நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணலாகும், ஒண்பொரு ளாவதையா உடன்பிறப் பாக்கல் ஆகா, எம்பியை ஈங்குப் பெற்றேன் என்எனக் கரியதென்றாள்”

என்று திருத்தக்க தேவரும் அருளிச் செய்தார். இங்ஙனமே, கந்தபுராணத்திலுஞ் சூரபன்பன் தன்றம்பி சிங்கமுகனை

நோக்கிப்,

"பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னை யுளபொருளை எல்லாம் பெறல் ஆகும் என்னையுடைய இளையோனே இப்பிறப்பில் உன்னை இனிப்பெறுவ துண்டோ உரையாயே’

என்று கூறியதும் உற்றுநோக்கற்பாலதாகும்.

وو

இங்ஙனம் பெறுதற்கரிய உடன்பிறப்பைப் பெற்று வைத்தும், அண்ணன் தம்பிமார் சிலர் அதன் அருமையைச் சிறிதும் உணராமல் ஒருவரையொருவர் பகைத்தும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொண்டும், ஒருவரையொருவர் ஏமாற்றியும் ஒற்றுமை கெட்டுத் தமது பிறவியைப் பாழாக்கு கின்றனர். ஏதோ முற்பிறவியிற் செய்த தவத்தால், இறைவன் தமக்கு உடன் பிறப்பைத் தந்தருளினான் என்றும், அவன் தந்த இப்பெரும் பேற்றை நாம் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும் என்றும் நினைந்து பாராதவர் மக்கள் ஆவரோ? நாம் உடன் பிறந்தோம் என்பதைச் சிறிதும் உணராத விலங்குகளுக்கும், தம் உடன் பிறப்பின் அருமையை உணராத மக்களுக்கும் வேற்றுமை உண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/182&oldid=1584415" இலிருந்து மீள்விக்கப்பட்டது