உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் 17

பாருங்கள் அன்பர்களே! ஓர் ஆவின் கன்றுகள் பலவும் பருவம் முதிர முதிரத் தாம் உடன் பிறந்ததனைச் சிறிதும் அறியாமல் தத்தம் வழியே போகின்றன; அதுபோலக் குழவிப் பருவத்தே ஒருங்கு பிறந்து ஒருங்கு வளர்ந்த உடன்பிறப்பினருந் தம்மை ஒன்றாய்ப் பிறப்பித்த ஐயனது திருவுளக் கருத்தைச் சிறிதும் நினையாமல் ஒற்றுமை கெட்டுத் தனித் தனியே செல்லுதல் கூடுமோ? சில நாளிலிருந்து தமது கையை விட்டகலுஞ் செல்வத்தின் பொருட்டாகவும், இடையே வந்து சேர்த்த மனையாளின் பொருட்டாகவும், உடன்பிறந்தார் தம்மிற் பகை கொண்டு, வேறு வேறாய்ப் பிரிந்து ஆண்டவன் நோக்கத்திற்கு மாறாய் ஒழுகுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும்.

இப்பிறப்பில் ஒருவன் தான் நினைத்த வண்ணந் தம்பியைப் பெறல்முடியுமா? தம்பி தமையனைப் பெறல் முடியுமா? தம்மாற் புதிதாகச் செய்து கொள்ள முடியாத உடன் பிறப்பின் அருமையை உணர்ந்து, தமையன் தம்பிமார் தமக்குள் மிகவும் அன்புடையராய் ஒன்றித்து வாழ்ந்து தமக்கும் உலகத்திற்கும் பயன்படல் வேண்டும். தம்பிமார் கல்வியிலும் அறிவிலும் எவ்வளவு சிறந்தவராயினும், சிறந்தவராயினும், பருவத்தில் முதிர்ந்த தம் தமையன்மார்க்குக் கீழ்ப்படிந்து ஒழுகி அவரைத் தம்மோடு இணக்கிக் கொள்ளல் வேண்டும்; தமையன்மார் ஆண்டில் மூத்தவராயினுங், கல்வியிலும் அறிவிலுஞ் சிறந்த தம் தம்பிமார்க்கு இணங்கி நடத்தல் வேண்டும். தமையன் தம்பிமார் தம் மனைவிமார்க்கு உடன்பிறப்பினருமையை அன்பொடு தெளிவாய் எடுத்துக்காட்டி அவரெல்லாம் ஒன்றுபட்டு நடக்கும்படி திருத்தல் வேண்டும்.

66

உடன் பிறந்தாரில் ஒருவர் கல்வி வளர்ச்சியின் பொருட்டும் பிற உயிர்களின் துன்பத்தைத் துடைக்கும் பொருட்டுஞ் செல்வத்தை நன்கு செலவிட்டுப் பயன்படுத்துவாராயின் அதனைக்கண்டு, ஐயோ! எம் உடன் பிறந்தான் எங்கள் செல்வத்தையெல்லாம் அழித்து விடுகின்றனனே!" என்று மற்றவர் வயிறு எரியாமல் “ஊர் நடுவிலுள்ள இனிய குளம் எல்லார்க்கும் பயன்படுதல்போல, நாம், பெரிதும் முயன்று தொகுத்த பொருளெல்லாந் தக்கார் பலர்க்கும் பயன்படும்படி அதனை நல்வழிப்படுத்தி, நமக்கும் நமது குடும்பத்திற்கும் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/183&oldid=1584416" இலிருந்து மீள்விக்கப்பட்டது