உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

159

புகழையும் பெரும் புண்ணியத்தையும் வருவிக்கும் இவனோடு உடன்பிறக்கப் பெற்ற எமது தவமே தவம்!” என்று மனம் மகிழ்ந்து, அதற்குத் தாமும் உதவியாய் நிற்றல் வேண்டும்.

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேர்அறி வாளன் திரு'

என்றும்,

66

தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு”

என்று திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளை இடையறாது நினைந்து, உடன்பிறந்தவர் பொருட்செலவாற் பகை காள்ளாது, ஒற்றுமைப்பட்டு வாழக் கடமைப் பட்டிருக்கின்றார்கள்; துன்பம் வந்த காலத்தும் இன்பம் வந்த காலத்தும் ஒரு தாய்மக்கள் ஒன்றாயிருந்து அவற்றை நுகர்தலே அவர் தமக்கு முறையாம்.

பாண்டவர் ஐவரும் நாடிழந்து காடு போய்த் துன்புற்ற போதும், திரும்பி நாடடைந்து அரசியற்றி இன்புற்ற போதும் ஒன்றாய் இருந்தமை இன்னும் புகழப்படுகின்ற தன்றோ? தன் சொற்கேளாத தமையன் சூரபன்மனைத் தான் விட்டுப் போகாது அவனோடு கூடவேயிருந்து உயிர் துறந்த அவன்றம்பி சிங்க முகனது அரிய அன்பு இன்னும் பாராட்டப்படு கின்றதன்றோ? தன் றமையன் இராமனோடு கூடவே காடு புகுந்து, அவன் உறங்கும் காலத்துந் தான் உறங்காமல் அவனுக்குப் பதினான்கு ஆண்டு பாதுகாவலனாய் நின்று, அதன் பொருட்டுப் பெரிதுந் துன்புற்ற அவன் றம்பி இலக்குமணனது அரிய அன்பு நேயம் இன்னும் உலகிற்கு ஒரு நல் எடுத்துக் காட்டாய் விளங்கு கின்றதன்றோ?

இங்ஙனமெல்லாந் தம் உடன் பிறந்தாரோடு ஒன்றுகூடி வாழ்ந்தவர்க்கே, மற்றவர்களையுந் தம்மோடு உடன் பிறந்தவராகக் கருதிப் பேரன்பு பாராட்டி, இறைவன் திருவருளைப் பெறும் பெருஞ் செல்வம் உண்டாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/184&oldid=1584418" இலிருந்து மீள்விக்கப்பட்டது