உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

17. கூட்டு வாணிகம்

“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்"

(குறள் 460)

பொருள் தேடுவதற்கு உரிய முயற்சிகள் பலவற்றுள் வாணிகம் என்பது ஒன்று. பொருள் தேடும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாய் இருந்தாலும், உலக வாழ்க்கை செவ்வனே நடைபெறுதற்கு மிகவும் பயன்படுதலால், இது மற்ற முயற்சிகளைவிடச் சிறந்ததாய் இருக்கின்றது.

நமது வாழ்க்கைக்குக் கட்டாயமாய் வேண்டப்படுகின்ற உணவுப்பொருள்களும், உடுப்புகளும், அணிகலங்களும்,புழங்கும் ஏனங்களுந், தட்டு முட்டுகளும், ஓவியங்கள் இசைக் கருவிகள் சந்தனம் பஞ்சு முதலியனவும் ஒரே ஊரில் அல்லது ஒரே நாட்டில் உண்டானவை அல்ல. இவையெல்லாம் ஒன்றுக் கொன்று எட்டாத் தொலைவில் உள்ள பல ஊர்களிலும் பல நாடுகளிலும் உண்டாவன ஆகும். இப்பண்டங்களையெல்லாம் ஒருவர் தாம் வேண்டிய அளவுக்குப் பற்பல இடங்களிலுமிருந்து வருவித்துக் கொள்வதென்றால், அதற்காக அவர் எவ்வளவோ பொருளைச் செலவழித்து எவ்வளவோ அல்லும் பகலும் அலைக்கழியல் வேண்டும்.

ஏராளமான பொருளுடையவர்க்கு இவ்வளவு செலவும் அலைக்கழிவும் மலைப்புக்கு இடமாய் இல்லா விட்டாலும்,மிகச் சிறிய வரும்படியைக் கொண்டு அன்றாடங் காலங் கழிக்கும் ஏழை எளியவர்கட்கு இவை எவ்வளவு துன்பத்தைத் தரும்! இலங்கையிலுள்ள ஏழை மக்கள் வங்காளம் இரங்கூன் முதலான தாலைவிடங்களில் விளையும் நெல்லைத் தனியே வருவித்துக் கொள்ளல் இயலுமோ? இந்தியாவிலுள்ள எளியவர்கள் யாவாயிலும், மோரீசிலும் உண்டாகுஞ் சருக்கரையைத் தனியே வருவித்தல் இயலுமோ? இங்கிலாந்தி லுள்ள வறிய மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/185&oldid=1584419" இலிருந்து மீள்விக்கப்பட்டது