உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

161

இந்தியாவில் விளையும் பஞ்சை எளிதிற் பெற்றுக் கொள்ளல் கூடுமோ? இந்தியாவிலுள்ளவர் சீனத்திலுண்டாகும் பட்டை எளிதிற் பெற்றுக் கொள்ளல் கூடுமோ?

இங்ஙனமே உயிர்வாழ்க்கைக்கு இன்னும் கட்டாயமாக வேண்டப்படும் இவைபோன்ற பொருள்களெல்லாவற்றையும் ஒவ்வொருவருந் தனித்தனியே வருவித்துக் கொள்வதென்றால், அஃது அவர்க்கும் அவரைவிட வறியவர்களாயிருப்பவர்க்கும் முற்றும் ஆகாததொன்றாம். இனி, நடுத்தரமான செல்வம் உடை வர்களுக்கும் அஃது இசையாததுடன், பெருஞ் செல்வம் உடையவர்க்கு அஃது அளவிறந்த முயற்சியினையுங் காலக் கழிவினையும் பொருட் செலவினையும் தந்து கடைசியில் அவர்களை வறியராக்கவும் கூடும்.

இவ்வாறெல்லாம் மக்கள் அளவிறந்த துன்பத்திற்கு ஆளாகாமற், பல திசைகளிலும் பல நாடுகளிலும் பல ஊர்களிலுந் தோன்றும் பல்வகைப் பண்டங்களையும் ஓரிடத்தில் தொகுப்பித்து, எத்திறத்தவரும் அவற்றை நயந்த விலைக்கு எளிதில் வாங்கி இன்புறவும், அதனால் உலக வாழ்க்கை இனிது நடைபெறவும், பேருதவி செய்துவரும் வாணிக முயற்சியானது பெரிதுஞ் சிறந்த தொன்றென்பதனை யாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ?

இனி, இத்தனை மேன்மை உடையதாகிய வாணிக முயற்சியைச் செய்யப்புகுவோர், இது மக்கள் எல்லார்க்கும் நிரம்பவும் பயன்படுதலை உணர்ந்து, எல்லாரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையவர்களாயும் மக்களுக்கு வேண்டிய பல பண்டங்களின் வகையும் அவை உண்டாகும் இடங்களின் வரலாறுந் தெரிந்து அவற்றைக் குறைந்த செலவில் வருவித்து எல்லார்க்கும் நயமாக ஒரே விலை கூறி முகமலர்ந்து இனிய சொற் பேசி விற்கும் அறிவுந் திறமான செய்கையும் வாய்ந்தவர்களாயும் இருத்தல் வேண்டும். இவ்வளவுக்கும் அன்பும் அறிவுந் திறமான செய்கையும் இன்றியமையாது வேண்டப் படுதலால், இவ்வுயர்ந்த தன்மைகளை வணிகர்கள் ஒவ்வொருவருந் தம்மிடத்தே பழக்கத்துக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

மக்களிடத்தில் அன்பில்லாமல் எந்நேரமுந் தமக்கு வரும் தியத்தையே எண்ணிப் பார்ப்பவர்கள் உண்மையான வணிகர்கள் அல்லர். தாம் செய்யும் வாணிக முயற்சி பலர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/186&oldid=1584422" இலிருந்து மீள்விக்கப்பட்டது