உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் 17

பெரும் பயன்படுதலை உள்ளக் கனிவோடு எண்ணிப் பாராமல், தாம் அடையும் ஊதியத்திலேயே கருத்து வைப்பவர்கள் அவ்வாணிகத்தை இழந்து வறியராய்ப் போவார்கள். அன்பும் ரக்கமும்

வாய்ந்த வணிகனிடத்தே திருமகள்

குடி

காண்டிருப்பாள்; அவன் சென்றவிடமெல்லாஞ் செல்வம் ஓங்கும்; மெல்லிய திருமகள், தன் நலத்தையே முதன்மையாய்க் கருதும் வணிகனின் கரடுபட்ட வன்னெஞ்ச நெருஞ்சிற் காயை மிதிக்க அஞ்சி அவனை அறவேவிட்டு விலகிப் போய் விடுவாள். அழகும் அன்பும் அறிவும் உடையவர்களைக் கண்டால் எல்லாரும் அவரை விரும்பி அணுகி அவர்க்கு எல்லாச் சிறப்புஞ் செய்தலைப் பார்த்திருக்கின்றோம் அல்லமோ? அழகில்லாமல் வன்நெஞ்சமும் அறியாமையும் உடையவர்களா யிருப்பவர் களைக் கண்டால் எல்லாரும் அவரை அருவருக்கின்றன ரல்லரோ? அன்பும் அறிவும் உள்ளவர்களுக்கு அழகு தானே உண்டாகும்; அக்குணங்கள் இல்லாதவர்களுக்கு முன்னே உள்ள அழகுங் குன்றிப் போகும். கொடுங்குணம் உள்ளவனுக்குக் கடுகடுத்த முகமும் வன்சொல்லும் அமைந்திருத்தலை

வழக்கத்தில் நன்றாய் அறிந்திருக்கின்றனம் அல்லமோ? ஆகையால், வாணிகஞ் செய்பவர்கள் ஈர நெஞ்சமும் விரிந்த அறிவும் உண்டாகப் பழகிக் கொள்வார்களாயின், அவர்கள் முகத்தில் இதற்கு முன் இல்லாத அழகும் பொலிவுங் கிளர்ச்சி பெற்றுத் தோன்றும். அப்படிப்பட்டவர்களை எல்லாரும் விரும்பிச் சேர்ந்து தாம் வேண்டிய பண்டங்களை மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு செல்வர். அவர்கள் துவங்கிய வாணிகமும் மேன்மேற் செழித்தோங்கி, அவர்க்கும் பிறர்க்கும் அளவிறந்த நன்மையைத் தரும்.

இனிப், பொருள் தேடும் முயற்சிகளிற் சிறந்த வாணிகமும் பிறவுஞ் செய்து அல்லும் பகலும் வருந்தி உழைப்பதெல்லாம் இந்த வெற்றுடம்பைப் பாதுகாப்பதற்கு மட்டும் அன்று! இந்த உடம்பை இருப்பிடமாகக் கொண்டு வந்திருக்கும் நம் உயிரின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்தற்கும், எல்லாம் வல்ல கடவுளின் பேரின்பத்தைப் பெறுதற்குமேயாம். இவ்வரும்பெரு நோக்கம் ஈடேறும் பொருட்டு, இவ்வுடம்பைப் பாதுகாக்க வேண்டுவது இன்றியமையாத கட ன்றியமையாத கடமையாய் இருக்கின்றது. இவ்வுடம்பைப் பாதுகாவாவிட்டால் அறிவு விளக்கத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/187&oldid=1584423" இலிருந்து மீள்விக்கப்பட்டது