உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

163

இறைவனது திருவருளின்பத்தையும் நாம் பெறல் முடியாது. இதுபற்றியே திருமூல நாயனார்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

என்று திருமந்திரத்தில் அருளிச் செய்தனர்.

நடத்தும்

இனி, உடம்பைப் பாதுகாத்தற்காக இம்முயற்சிகளின் இடையே, நமதறிவை விளங்கச் செய்தற்கு ஒப்பற்ற துணையாய் வாய்த்த கல்வியைக் கற்றுக் கொள்ளப் பெரிதும் முயற்சி செய்தல் வேண்டும். கல்லாதவர் நெஞ்சம் இருளடைந்து கிடக்குமாதலால், அங்கே இறைவன் விளங்கித் தோன்றானென்பது “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்” என்று திருஞான சம்பந்தப் பெருமானுங், “கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக், கற்றார்கள் உற்று ஒருங் காதலானை', என்று திருநாவுக்கரசு நாயனாரும், “எல்லா இடத்தும் உளன் எங்கள் தம் இறை கல்லாதவர்கள் கலப்பறியாரே" என்று திருமூல நாயனாருங் கூறுதலால் நன்கு தெளியலாமன்றோ?

இன்னுங், கல்லாதவரைக் காணலும், அவர் சொற் கேட்டலும் ஆகா வெனவுங் கல்லாதவர்க்குக் கல்லாதவரே நல்லவராய்க் காணப்படுபவரெனவுங், கல்வியில்லாதவர் கடவுளது கருத்தை அறியமாட்டாரெனவும் நன்கு விளக்கிக்,

66

“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர்சொற் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லராங் கல்லாத மூடர் கருத்து அறியாரே”

என்று திருமூலநாயனார் அருளிச் செய்திருப்பதையும் நோக்குங் காற், கல்வியறிவு பெறாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாத குற்றமாய் முடிதல் பெறப்படுகின்றதன்றோ?

ஐரோப்பிய அமெரிக்க வணிகர்கள் எல்லாருங் கல்வியில் வல்லவராய் விளங்கித் தமது வாணிக முயற்சியை நிரம்பவும் பெருகச் செய்து உலகத்தார்க்குப் பல பெருநன்மைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/188&oldid=1584425" இலிருந்து மீள்விக்கப்பட்டது