உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

18. பெண்மக்கள் கடமை

"மங்கையர்க்குத் தனியரசி எங்கடெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கைமானி செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப்பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள் பொங்கொளி வெண்டிருநீறு பரப்பினாரைப்

போற்றுவார் கழலெம்மாற் போற்றலாமே'

சேக்கிழார்

நீண்டகாலத்திற்கு முன்னரே மங்கையர்க்கரசி என்னும் ஒரு பெண்மணியிருந்தார். அவ்வம்மையார் சோழ அரசனின் புதல்வியாவார். பிறகு அவர் பாண்டிநாட்டுக்கு அரசனான கூன் பாண்டியனுக்கு மனைவியாகி மதுரைமா நகரின்கண் அமர்ந்திருந்தனர். அக்காலத்தில் நாத்திகச் சமண மதமானது எங்கும் பரவிக், கரியமுகிலானது பகலவனொளியை மறைப்பது போலச் சைவசமயத்தை மிகுதியாய் மறைத்துவிட்டது. கூன்பாண்டியனும் அவன் குடிமக்களுஞ் சமண முனிவர் சொற்களால் மயங்கி அவர்களுடைய சமயவலையிற் சிக்கிக் கொண்டார்கள். ஆனால், அப்பாண்டியன் மனைவியரான மங்கையர்க்கரசியாரோ உண்மைகளைச் செவ்வையாகக் கற்றுணர்ந் திருந்தமையாற், சிவபெருமான் திருவடிகளில் நிலைபெயராத அன்புடைய வராய்ச் சமண சமய நாத்திக வலையில் அகப்படாமல் இருந்தனர். அதனோடு அவர் கற்பொழுக்கத்திலும் மிகச் சிறந்தவராய் இருந்ததனால், தங் கணவனான கூன் பாண்டியனிடத்தில் அருவருப்பில்லாதவராய், அவனை மீட்டுஞ் சைவ சமயத்திற்குத் திருப்பித் தரும்படி சிவபெருமானை இடைவிடாது வேண்டி வந்தனர்.

சவசமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/191&oldid=1584429" இலிருந்து மீள்விக்கப்பட்டது