உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

165

இந்த நுட்பத்தை நன்கு உணர்ந்த ஆங்கில நன்மக்கள் கூட்டு வாணிகஞ் செய்து அளவிறந்த செல்வத்தையும் இன்பத்தையும் பெறுகின்றார்கள்; தாம் வாணிகஞ் செய்யும் நாட்டிலுள்ளவர் களையும் நாகரிகத்திலும் நல்வாழ்விலும் மேம்படச் செய்கின்றார்கள். நம் தமிழ் வாணிகர்களோ இந்த நுட்பத்தை அறிதற்கு ஏற்ற கல்வியறிவும் ஈரநெஞ்சமும் பெரும்பாலும் எல்லாச்

இல்லாதவர்களாய் இருத்தலால், தாமே

செல்வத்தையும் அடைய வேண்டுமென்னும்பேராவலும், மற்றவர்கள் எவ்வகையிலும் மேம்படலாகாதென்னும் தீய எண்ணமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர்! இதனால் இவர் தாழ்வடைவதோடு, நமது வளம் மிக்க தமிழ்நாட்டையுந் தாழ்வடையச் செய்கின்றனர்!

மக்களாய்ப் பிறந்த நாம் இவ்வுலக வாழ்வில் எவ்வளவு காலம் நிலைத்திருப்போமென்றும், இவ்வாழ்வைவிட்டுப் போகுங்கால் எவ்வகையாகச் செல்வோமென்றுஞ் சிறிதேனும் நினைத்துப் பார்ப்போமாயின், இங்ஙனமெல்லாம் நாமே உயர வேண்டுமெனவும் பிறரெல்லாந் தாழவேண்டுமெனவும் எண்ண மாட்டோம். உண்மையோடு ஒருவருக்கொருவர் உதவியா யிருந்து அன்பையும் அறிவையும் வளரச் செய்வதே இந்த வாழ்க்கையின் பயன் என்றும், இங்ஙனம் ஒருவருக் கொருவர் துணைவராயிருந்து வாழ்வதற்கு உதவியாயிருப்பதே செல்வத்தின் பயனாமென்றும், அச்செல்வத்தை எவ்வளவு மிகுதியாகப் பெற்றாலும் அஃது இறக்குங்காற் கூடவர மாட்டாதென்றும் வணிகர்கள் அடிக்கடி நினைந்து பார்த்தல் வேண்டும்.

66

“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு

கைத்தலை மேல்வைத்தழு மைந்தருஞ் சுடுகாடுமட்டே, பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே”

என்ற பட்டினத்து அடிகள் திருமொழியை எந்நேரமும் அவர்கள் நெஞ்சிற் பதித்துச், சூதுங் கள்ளமும் இன்றி, உண்மையோடு ஒழுகிப், பலரும் ஒன்றுகூடி வாணிக முயற்சியைப் பெருகச் செய்து, தாம் பெற்ற ஊதியத்தைக் கல்விக்கும் பலவகை யறங்களுக்கும் பயன்படுத்தி வருதல் உண்மை வாணிகர்களுக்கு இன்றியமையாத கடமையாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/190&oldid=1584428" இலிருந்து மீள்விக்கப்பட்டது