உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

❖ LDM MLDMOELD -17 ❖

மங்கையர்க்கரசியார் தோன்றிய பெண் வகுப்பிலே பிறப்பதற்கு அருந்தவஞ் செய்த பெண்மக்கள் எல்லாரும் அந்த அரசியாரைப் போலவே, அறிவுடைய மேன்மக்களாற் புகழ்ந்து பாராட்டும்படி உயர்ந்து நல்வழியிலே நடக்க வேண்டுவது அவர்கட்கு இன்றியமையாத கடமையாகும்.

இனி, உயர்ந்த நல்வழியிலே நடக்குமிடத்தும், அவரவர் தன்மைக்குப் பொருத்தமான தகையாய் நடந்து கொள்ளல் வேண்டும். பெண்மக்கள் தம்முடைய தன்மைக்குத் தகுந்த வழியிலும், ஆண்மக்கள் தம்முடைய இயல்புக்கு ஏற்ற வழியிலும் பகுத்தறிந்து ஒழுகுதலே சிறந்ததாகும். பெண்மை யென்பது எல்லாராலும் விரும்பத்தக்க ஓர் அமைதியான தன்மையென்றும், ஆண்மை என்பது பிறரை ஆளுந்தன்மை யென்றும் பொருள்படு தலாற், பெண்மக்கள் எல்லாரும் இயற்கையிலேயே அமைதிக் குணம் உடையவராவரென்பது தெளிவாக விளங்குகின்றது.

ஆண்மக்கள்

ஆளுந்தன்மையுடை யவர்களாய் இருத்தலால், எதனையும் முற்பட்டுச் சென்று செய்யுங் கிளர்ச்சி மிக்கவராய் இருக்கின்றனர்; பெண்மக்களோ அங்ஙனம் எதனையும் விரைந்து செய்யாது ஆழமாக நினைந்து பார்த்து அமைதியுடன் செய்து முடிப்பவராயிருக்கின்றனர்; விரைந்து செய்யுங் கிளர்ச்சியினால் ஆண்மக்கள் ஒரோவொருகாற் பிழை செய்தலுங்கூடும்; அமைதியாக ஆழ்ந்து செய்யும் இயற்கையாற் பெண்மக்கள் பிழைப்பதற்கு இடமே இல்லை.

ஆண்மக்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு சிறந்த தான அமைதித் தன்மையைப் பெற்றும், அதனைப் பயன்படுத்தித் திருத்தமாக நடவாவிட்டாற் பெண்மக்கள் பெருங்குற்றத்திற்கு ஆளாவர். கையிற் பொருள் இல்லாதவன் அறஞ்செய்யா விட்டால் அதனை ஒரு குற்றமாகச் சொல்ல மாட்டார்கள். கையிற் பொருளுடையவன் அறஞ் செய்யானாயின் அவனை ஒரு பெருங்குற்றமாகவே நினைத்து எல்லாரும் அவனை இகழ்ந்து பேசுவர். அதுபோலவே, அமைதிக் குணம் என்னும் ஒப்பற்ற பெருஞ்செல்வத்தைப் பெற்றும், அதனை நல்வழியிற் பயன்படுத்தாத பெண்மக்கள், உலகத்தாரால் நிரம்பவும் பழிக்கப் படுவார்கள். அமைதிக் குணத்தை விட்டவர்கள் வடிவத்தாற் பெண் மக்களைப்போல் இருந்தாலும், அவர்கள் கொடுங்குண முடைய ஆண்மக்களினுங் கீழ்ப்பட்டவர் ஆவர்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/193&oldid=1584432" இலிருந்து மீள்விக்கப்பட்டது