உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

169

வடிவத்தால் மட்டும் பெண்போற் றோன்றிக் குணத்தால் மிக இழிந்தவர்களாய் இருப்பவர்களையே பட்டினத்துப் பிள்ளையார், தாயுமான அடிகள் முதலான சான்றோர் களெல்லாரும் மிகவும் இழித்துப் பாடியிருக்கின்றார்கள். ஆதலால், இயற்கையாகவே தமக்கு வாய்ந்த அமைதிக் குணத்தை மேன்மேல் வளரச் செய்து வருதலே பெண் பிறவியெடுத்த நல்லார்க்குச் சிறந்த முறையாகும்.

இனி, அமைதிக் குணத்தை மேன்மேல் வளரச் செய்யும் வழிதான் யாதென்றால், மனமுஞ் சொல்லும் செயலும் அமைதியாக நடைபெறும்படி பழகுவதேயாகும். நிறைந்த சல்வத்தை எப்படியாவது பெற்று உயர்ந்த பட்டாடைகளும் விலையுயர்ந்த மணிக்கலன்களும் அணிந்து நாவிற்கு இனிய பண்டங்களை முப்பொழுதும் விலாப் புடைக்கத் தின்று, யாரும் நிகர் இன்றி மாடமாளிகைகளில் யாம் வாழல் வேண்டும், பிறர் எப்படியானாலும் எனக்கு ஆகவேண்டுவதென்ன, என்று இப்படியெல்லாம் வீணான எண்ணங்களை எண்ணாமல், தமது விருப்பத்தை அடக்கல் வேண்டும்.

நுகரப்படுகின்ற பொருள்கள் மேல் மட்டுக்கு அடங்காமற் செல்லும் அவாவைச் சுருக்குவதலே பெண்பாலர்க்குப் பெருஞ் சிறப்பாகும் என்பதனை உணர்த்துதற்கன்றே தெய்வத் தன்மை வாய்ந்த ஔவையாரும், “உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு என்று அருளிச்செய்திருக் கின்றனர்? இவ்வுண்மை தெரியாத வர்கள் உணவைக் குறைத்துச் சாப்பிடுதலே பெண் மக்களுக்கு அழகாகும் என்று கூறுவார்கள்; அது பொருந்தாது; உடம்பு வலிவு குன்றி நோய்க்கு இரையாகும்; பெரும்பாலும் பெண்மக்கள் நாம் துய்க்கும் பொருள்களிற் கிடைத்தமட்டில் மன அமைதி பெறாமற் பின்னும் பின்னும் அவற்றைப் பெறுதற்கும் நுகர்தற்கும் அளவுகடந்த விருப்பம் உடையவர்களாய் இருத்தலாலும், அவ்விருப்பத்தால் தம்மைக் கொண்டார்க்கும் அளவிறந்த துன்பத்தையுங் கவலையையுங் வருவித்தலாலும், அவர்கள் அவ்விருப்பத்தைச் சுருக்கிக் காள்ளுதல் வேண்டுமென்பதே ஒளவைப் பிராட்டியார் கருத்தாகும்.

ஆகவே, ‘ஆற்றிற்கிடந்து புரண்டாலும் ஒட்டும் மணலே ஒட்டும்' என்ற பழமொழிப்படி, இறைவன் அன்று அமைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/194&oldid=1584435" இலிருந்து மீள்விக்கப்பட்டது