உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

என்ற திருவள்ளுவர் திருக்குறளும்,

66

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென் என்பெலாம் பற்றி எரிகின்ற தையையோ

அன்பிலாள் இட்ட அமுது

என்ற ஔவையார் திருப்பாட்டுமே சான்றாம்.

இன்னும்,

உண்ணச் சோறு

இன்றியும்

171

உடுக்கக்

கூறையின்றியும் வருந்தி வந்த ஏழை எளியவர்களைக் கடுகடுத்துப் பேசித் துரத்தாமல், அவரை ஏற்கும் நிலையிலுந், தம்மை அவர்க்கு டும் நிலையிலும் வைத்த ஐயன் செயலை எண்ணி அவர்க்கு நெஞ்சம் இரங்கி, அன்போடும் இன்சொற் கூறிச் சோறுங் கூறையுங் கொடுப்பதுதான் பெண்மக்களுக்குத் தெய்வத் தன்மையை உண்டாக்கும்.செல்வமானது நிலை யில்லாமல் மாறி மாறி வருவதொன்றாகையாற், பொருளை இழந்த பிறகு ‘அறஞ் செய்யாமற் போனோமே' என்று ஏமாறாமற், பொருள் உள்ளபோதே,

66

"ஆறிடு மேடும் மடுவும்போல் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாருந் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து’

என்றபடி பல வகையிலும் ஈகையறங்களைத் தாமே செய்தும், தம்மைச் சேர்ந்தவர்கள் செய்வதற்கு உதவியாய் நின்றும் புண்ணியத்தைத் தமக்குத் துணையாகத் தேடிக்கொள்ளல் வேண்டும்.

இனிக், கல்வியில்லாதவர்கள் விலங்குகட்கு ஒப்பாவர் என்று தெய்வத் திருவள்ளுவர் கூறுதலாலும்,

“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/196&oldid=1584437" இலிருந்து மீள்விக்கப்பட்டது