உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

❖ LDM MLDMOELD -17 •

என்ற நாலடியாரின்படி கல்வியில்லாதவர்க்கு உள்ள அழகும் ஒப்பனைகளுஞ் சிறப்பாகமாட்டா ஆதலாலும், ஆண் மக்களைப் போலவே பெண்மக்களும் இடைவிடாது கற்றுத், தமது அறிவை நிரம்பவுந் துலக்கிக் கொள்ளல் வேண்டும். கல்வி கற்கக் கற்க அறிவு ஆழமாய்ச் செல்லுமாதலால், அவர்கட்கு இயல்பாக உள்ள அமைதிக் குணமும் அதனால் மேலும் மேலும் பெருகும்; மிகவும் ஆழமான ஓர் யாறானது எவ்வளவு அமைதியாய்ச் செல்கின்றது! ஆழம் இல்லாத யாற்றின் நீர் சிலுசிலுவென்று எவ்வளவு விரைவாய் ஓடி வற்றிப் போகின்றது! ஆகவே, பெண் மக்கள் தமது அமைதிக் குணத்திற்கு மிகவும் இசைந்ததான கல்வியைக் கற்றலிற் சிறிதும் பராமுகமாய் இருத்தல் ஆகாது.

6

இங்ஙனமெல்லாந் தமது அமைதிக் குணத்தைப் பாதுகாத்து வளர்க்கும் மங்கையர்கள், அக்குணத்தை வெளியே புலப்படுத்துந் தம்முடைய வாய்ச் சொற்களை இனிதாக அமைந்த மெல்லிய குரலிற் பேசப் பழகல் வேண்டும். எத்தனை நல்லவர்களாய் இருந்தாலும், இனிமை இன்றிப் பரப்பரப்போடு உரக்கப் பேசுகிறவர்களைக் கண்டால் எவர்க்கும் அருவருப்பு அமைதிக்கே உரியவர்களான பெண் பாலாரிடத்து இப்பொல்லாங்கு காணப்படுமாயின், அது பிறர்க்கு எவ்வளவு உவர்ப்பினைத் தோற்றுவிக்கும்!

உண்டாகின்றது.

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

(குறள் )

என்னுந் திருவள்ளுவ நாயனார் அருள் உரையை மாதர்கள் எப்போதும் கருத்திற் பதியவைத்தல் வேண்டும்.

இனி, மாதர்கள் தமது அமைதிக் குணத்திற்குப் பொருத்த மாகத், தமது உடம்பின் செயல்களை அமைதிப்படுத்தி, நாணமும் அடக்கமும் உடையவர்களாக ஒழுகுதல் வேண்டும். தமது வருவாய்க்குத் தக்கபடி தூய ஆடை அணிகலன்கள் ஆரவார மின்றி அணிந்து, குளித்தும் முழுகியுந் தூயராக நடத்தல் அவர் தமக்கு முதன்மையான கடமையாம். இவற்றொடு கடவுளைத் தொழுதலும் அடியாரை ஏற்று அவர்க்குத் தொண்டு செய்தலும் நாடோறும் வழுவாமற் கடைப்பிடியாகச் செய்துவரல் வேண்டும், என்று இவ்வளவும் எல்லாப் பெண்மக்களுக்கும் உரிய கடமைகளில் முதன்மையாவனவாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/197&oldid=1584439" இலிருந்து மீள்விக்கப்பட்டது