உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

19. பெற்றோள் கடமை

தாயானவள் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமை மற்ற எல்லாக் கடமைகளிலுஞ் சிறந்ததாக இருத்தலின் அதைப்பற்றி இங்கு வரைவது பெரிதும் பயன் தருவதாகும். மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையிலும், மக்கள் பெற்றோர்க்குச் செய்யும் கடமையிலும், உடன்பிறந்தார் உடன் பிறந்தார்க்குச் செய்யுங் கடமையிலும், நண்பர் நண்பர்க்குச் செய்யுங்

மையிலும், குடிகள் அரசர்க்குச் செய்யுங் கடமையிலும், அரசர் குடிகட்குச் செய்யுங் கடமையிலுந் தாயானவள் தன் மக்கட்குச் செய்யுங் கடமையே மிக மேலானதொன்றாய் விளங்குகின்றது.

ஏ னென்றால், மனைவியாயுங், கணவனாயும், உடன் பிறந்தாராயும், நண்பராயுங், குடிகளாயும், அரசராயும் உள்ள எல்லாரும் முடிவாகத் தாயின் வயிற்றிற் பிறந்தவர்களே யாகையால், அவர்களெல்லாருந் தாயின் உதவியினாலேயே மேலான நிலைமைக்கு வரவேண்டியவர்களா யிருக்கின்றார்கள். குழந்தை களாயிருந்த காலந்தொட்டே, தாயானவள் தன் மக்களை எந்த வகையில் வளர்த்து வருகின்றாளோ அந்த வகைக்கேற்ற படியே அவர்கள் வளர்ந்து நல்லவராகவாவது, தீயவராகவாவது நடப்பார்கள்.

தாயானவள் நல்லறிவும், நல்லியல்பும், நல்ல செய்கையும் உடையளா யிருந்தலொடு தன் மக்களும் தன்னைப்போலவே ஆகல் வேண்டுமென்று அக்கறையோடு அவர்களை வளர்த்து வருவளாயின், அவர்கள் நல்லவராயே விளங்குவர். இவ்வா றின்றித் தாயானவள் தீயவளாயிருப்பளாயின் அவளால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளுந்தீயவர்களாயே நடப்பரென்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? கொழுமையான நல்ல நிலத்தில் முளைத்த பயிரையும், உரமற்ற உவர் நிலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/198&oldid=1584441" இலிருந்து மீள்விக்கப்பட்டது