உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

❖ LDM MLDMOELD -17 ❖

தோன்றிய புற்பூண்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நல்ல நிலத்தில் முளைத்த பயிர் எவ்வளவு செழுமையாய் வளர்ந்து நெல், கேழ்வரகு, சோளம் முதலான பொருள்களைத் தந்து எல்லார்க்கும் எவ்வளவு மிகுதியாய்ப் பயன்படுகின்றன. உவர் நிலத்திற்றோன்றிய புற்பூண்டுகளோ வற்றி வறண்டு விலங்கினங் களுக்கும் பயன்படாமற் போகின்றன. இதுபோலவே, நல்ல தாயிடத்துந் தீய தாயினிடத்துந் தோன்றிய பிள்ளைகளும் இருப்பார்களென்று தெரிந்து கொள்ளல் வேண்டும்.

"தொட்டிற் பழக்கஞ் சுடுகாடு மட்டும்” என்னும் பழமொழிப்படி நாம் நாம் சிறு சிறு பிள்ளைகளாயிருந்தபோது நம்மிடத்தில் உண்டான பழக்கம் நம் அறிவில் வேரூன்றி விடுதலால் அது நாம் வளருந்தோறுங் கூடவே வளர்ந்து நன்மையையாவது, தீமையையாவது தருகின்றது ஆதலாற் பெரியவர்களான பிறகும் எல்லார்க்கும் நல்லவர்களாய்ப் பயன்பட்டு வாழ்வதற்கு நாம் சிறுபொழுதிற் கைக்கொண்ட பழக்கமே முதன்மையான தாயிருக்கின்றது.

இனிச் சிறுபோதில் நமக்கு வரும் பழக்கம் எங்கேயிருந்து வருகின்றதென்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள்! நாம் குழந்தையாயிருந்த காலத்தில் நம்மைப் பெற்ற தந்தையொடு நெருங்கிப் பழகினோமா? சிறிதும் இல்லையே. ஏனெனில், நம் தந்தையோ நம்மையும், நம் அன்னையையும், நம்மைச் சேர்ந்தவர் களையும் பாதுகாக்கும் பொருட்டுப் பகற் பொழுதெல்லாம் வெளியே சென்று உழைத்துவிட்டு, மாலைப் பொழுதில் வீட்டிற்கு வந்து அலுத்து இளைப்பாறப் போகின்றனர்.நம்முடன் பிறந்தாரோ சிறியராயிருந்தால் நமக்கு ஏதுந் தெரிவிக்க மாட்டாராயிருத்தலின் அவரால் நாம் அடையும் பயன் ஒன்றுமில்லை. அவர் பெரியராயிருந்தாலோ கல்வி கற்கவும், பொருள்தேடவுங், கணவனோடு வாழவும் வெளியே போய் விடுகின்றனர். ஆதலால், அவராலும் நாம் அடைவதொன் றில்லை. மற்றுச், சுற்றத்தாரும் இடைக்கிடையே நம் வீட்டுக்கு வந்து போகின்றவர்களேயல்லாமல் நிலையாக நம்மோடிருந்து நம்மோடு நெருங்கிப் பழகுகின்றவர் களல்லாமையால் அவர்களாலும் நாம் பெறுவது ஒன்று மில்லை. இவர்களெல்லாம் இங்ஙனமாகப், பின்னை யார் தாம் நமது சிறு பருவத்தில் நம்மோடு உடன் பழகுவோர் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர் தம் தாய்மாரே ஆவரென்று உணரப் பெறுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/199&oldid=1584443" இலிருந்து மீள்விக்கப்பட்டது