உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

175

நாம் ஏதும் அறியாத சிறுகுழவி யாயிருந்த போது நம்மைச் சீராட்டிப் பாராட்டி வந்தவள் நம் அன்னையேயன்றோ? நாம் பசியால் வருந்தி வாய்திறந்து அழுதபோது நம் அருகே ஓடிவந்து நம்மை எடுத்து முத்தம் வைத்து உள்ளங் கசிந்து பாலூட்டினவள் நம் அன்னையேயன்றோ? நாம் சிறிது சிறிதாய் வளர்ந்து வரும்போது நமக்கு வேண்டிய பாலுஞ் சோறும் முதலான பொருள்களை நமக்குச் சுட்டிச் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களை நமக்குக் கற்றுக் கொடுத்து வந்த முதல் ஆசிரியனும் நம் அருமைத் தாயேயன்றோ? இடைக்கிடையே நாம் நோயால் வருந்திக் கிடந்த காலங்களிலெல்லாம் அதற்குத் தானும் உடன் வருந்திப் பகலென்றும் இரவென்றும் பாராது நம் அருகிருந்து நம் நோய் தீரும் பொருட்டு வேண்டும் உதவிகளை எல்லாம் கைம்மாறு கருதாது செய்துவந்த அருட்களஞ்சியம் போல்வாளும் நம் அன்னையேயன்றோ?

ங்ஙனமெல்லாம் நம் உயிரோடும், உடம்போடும், நம் நினைவோடும், நம் சொல்லோடும், நம் செயலோடும் உடன் கலந்து, உடன் பழகி வருந் தெய்வம் போல்வாள் நம் அன்னையாகவே இருத்தலின் அவளாலேதான் நாம் சீர்திருந்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இவ்வாறு நம்மை முழுதுஞ் சீர்திருத்த வேண்டிய ய நிலைமையிலுள்ள நம் அன்னையானவள் தான் தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முற்றும் அறிந்தவளாக இருக்க வேண்டுவது முதன்மையன்றோ? அறிவில்லாத தாய் தன் மக்களை எப்படி அறிவுடையராக்கக் கூடும்? விளக்கில்லாத இடத்தில் வெளிச்சம் உண்டாகுமா? பூவில்லாத இடத்தில் மணம் உண்டாகுமா? ஆதலால், தாயானவள் மிகுந்த அறிவுடையவளாய் இருந்தால் மட்டுமே அவள் மக்களும் அறிவுடையராயிருப்பர்.

இனித் தாய்மார்களுக்கு அறிவுதான் எப்படி வரக் கூடுமென்று எண்ணிப் பார்ப்போமாயிற், கற்றார் சொல்லும் அரிய பொருள்களை அடுத்தடுத்துக் கேட்பதனாலும் அவர் எழுதிய நூல்களை இடைவிடாது கற்று உணர்வதனாலுமே அவர் அறிவுடையராகக் கூடுமென்பது தெளிவாக விளங்கும்.

கல்வியறிவிலும், உயர்ந்த எண்ணங்களிலுமே எந்நேரமும் பழகின ஒரு தாய்க்கு நல்ல பிள்ளைகளே பிறக்கக் கூடுமல்லாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/200&oldid=1584444" இலிருந்து மீள்விக்கப்பட்டது