உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

❖ LDM MLDMOELD -17 •

தீய பிள்ளைகள் பிறப்பதற்குச் சிறிதும் இடமில்லை. நாம் எவ்வகையான நினைவில் ஓயாமற் பழகி வருகிறோமோ அதற்குத் தக்கபடியே நம் உடம்பிலுஞ், செய்கையிலும் பல வகையான அடையாளங்கள் காணப்படுகின்றன.

வெடு வெடுப்பாகப் பேசும் ஒருவர் முகத்தையும், மிகவும் அமைதியாகப் பேசும் மற்றொருவர் முகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! சீற்றம் உள்ளவர் முகம் பார்ப்பவர்க்கு எவ்வளவு அச்சத்தைத் தருகின்றது! அமைதியுள்ளவர் முகமோ எவ்வளவு கவர்ச்சியைத் தருகின்றது! உயர்ந்த அறிவுடையோர் செய்கை எல்லார்க்கும் இன்பத்தைத் தருதலும், அறிவில்லாதவர் செய்கை துன்பத்தைத் தருதலும் நாம் வழக்கமாய் அறிந்திருக்கின்றனமே. இப்படியாக நம்மறிவுக்கும் நினைவுக்கும் ஏற்றபடி நம் உடம்புஞ் சய்கையும் மாறுபடுவதைக் காணுங்கால், நாம் எவ்வளவு அமைதியும் எவ்வளவு அறிவும் உடையவர்களாக ஒழுக வேண்டுமென்பது தங்களுக்கு விளங்காமற் போகாது.

நாம் அழகுடையவர்களாயிருக்க வேண்டுமென்றும், நாம் நல்ல பிள்ளைகளைப் பெறல் வேண்டுமென்றும் அளவிறந்த ஆவல் உடையவர்களாயிருக்கின்றோம். ஆனால், அவ் ஆவலின் படியே பெறுவதற்கு முன்னதாகச் செய்ய வேண்டும் ஏற்பாடு களைச் செய்து வைக்கின்றோமா? சிறிதும் இல்லையே. பசியெடுத்த போது நல்ல உணவு உண்ண வேண்டுமென்று விரும்புகிறவர்கள், பசியெடுக்கும் முன்னமே அவ்வுணவைச் சமைத்துக் கொள்ளல் வேண்டும் அன்றோ? மழை பெய்தாற் பயிர் செய்து பிழைக்க வழிதேடுபவர்கள், மழை வருதற்கு முந்தியே நிலத்தைத் திருத்திப் பதப்படுத்த வேண்டாமா? அழகான அறிவும் அழகான தன்மையும் இல்லாதவர்க்கு அழகு எங்கேயிருந்து வந்துவிடும்? நல்லவரல்லாதவரும் அழகுடையராய் இருக்க காண்கிறோமே என்றால், அவர்க்கு உள்ள வெளி அழகு முதலிற் பார்ப்பவர்க்குச் சிறிது கவர்ச்சியை உண்டு பண்ணுமேனும், பிறகு அவரொடு கலந்து பழகுவார்க்கு, அவரிடத்திலுள்ள தீய தன்மை அருவருப்பை விளைக்கு மாதலால் அது சிறிதும் அழகாக மாட்டாது. எட்டிப்பழம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயிருந்தாலும், அதனைச் சிறிது நாவிலிட்டால் அஃது எவ்வளவு அருவருப்பைத் தருகின்றது! ஆகவே, பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிய அறிவும் இனிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/201&oldid=1584446" இலிருந்து மீள்விக்கப்பட்டது