உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

179

அவனை அவள் தனது வயிற்றிற் சூல்கொண்டிருந்த போது, அவள் கற்றறிவுடையாளாயிருந்தமையின் ஆண்மையிற் சிறந்த போர் மறவன் ஒருவனது வரலாற்றைப் படித்து மிகுந்த மனக் கிளர்ச்சி உடையளாய் இருந்தனளாம். தான் படித்த அவ்வரலாற்றிற் போந்த போர் மறவனுடைய ஆண்மைச் செயல்களையும் நுட்ப அறிவின் திறமைகளையும் அவள் அடிக்கடி நினைந்து மகிழ்ந்து வரவே, அவள் வயிற்றிலிருந்த கருவும் அவளுடைய உயர்ந்த எண்ணங்கள் ஏறப்பெற்று மிகுந்த கிளர்ச்சியோடும் வளர்வதாயிற்று. இவ்வாறு கருவிலேயே தன் நினைவுகள் உருவேறப் பெற்றுப் பிறந்தமையாற், பிறகு அஃது இம்மாநிலத்தவரெல்லாம் வியக்கத்தக்க அரிய ஆண்மைச் செயல்களைப் புரிந்து மன்னர் மன்னனாய் விளங்கிற்று. இந்த இயல்பை உற்றுநோக்கும் நம் பெண்மணிகள் தாம்

சூல்கொண்டிருக்குங் காலங்களில் எவ்வளவு நல்ல நினைவும், எவ்வளவு நல்ல அறிவும் உடையவர்களாக இருக்கப் பழகிக் கொள்ளல் வேண்டும் என்பதை அறிவார்களாக!

கருக் கொண்டிருக்குங் காலத்திற் பிழைபட நடந்தால் அதனாற் பிள்ளைகள் சீர்கெட்டுப் போகின்றனர் என்பதற்கு உண்மையாக நடந்த சில நிகழ்ச்சிகளை இங்கு எடுத்துக் காட்டு வாம். ஒருகால் ஒரு பெண்மகள் தான் சூல்கொண்டிருந்த மூன்றாம் திங்களிற் ஒரு கரடிக்குட்டியைப் பார்த்துப் பெருந்திகில் அடைந்தாள். பின்னர் அக்கரு பிள்ளையாய்ப் பிறந்து பதினான்கு ஆண்டு உயிரோடிருந்தது. அப்பிள்ளை உயிரோடிருந்த காலமெல்லாங் கரடிக்குரிய குணமுஞ் செய்கையும் உடையதாயிருந்தது.

மற்றொரு பெண்மகள் சூல்கொண்டிருந்தபோது ஒரு கிளிப்பிள்ளையினால் அச்சுறுத்தப்பட்டாள். பின்னர் அவள் பெற்ற பெண் குழந்தையானது கிளிப்பிள்ளையின் குரலுஞ் செயலும் உடையதாயிற்று.

மற்றொரு பெருமாட்டி தலை நசுங்கிப்போன ஓர் யாட்டுக்குட்டியைப் பார்த்து மனம் மருண்டாள். அவள் ஈன்ற மகவானது தலையின் இருபுறமும் நசுங்கி நெற்றி பிதுங்கி யிருந்தது. என்றாலும் அப்பிள்ளையின் அறிவு மட்டும் பழுதுபடாமல் விளங்கிற்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/204&oldid=1584451" இலிருந்து மீள்விக்கப்பட்டது