உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் -17

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கால், ஒரு கையுடன் ஒரு பெண்பிள்ளை பிறந்தாள். அப்பிள்ளையைப் பலருங் காணும் படி கண்காட்சிச் சாலையிற் கொண்டுவந்து வைத்தார்கள். இரண்டு திங்களாகக் கருக் கொண்டிருந்த ஒரு பெருமாட்டி அப் பிள்ளைகளைப் பார்க்க மிகுதியும் விரும்பினாள்; தன் விருப்பப்படியே அதனைப் போய்ப் பார்க்கையில், அவளுக்கு அது மிகவும் புதுமையாகத் தோன்றினமையால் அப்பிள்ளையின் வடிவத்தை அவள் நிரம்பவுங் கருத்தாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நண்பர்கள் அவளை, அதனின்றுங் கட்டாயப் படுத்தித்தான் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அப்பிள்ளையின் வேறுபட்ட வடிவம் அப்பெருமாட்டியின் உள்ளத்தில் மறக்கப்படாமற் பதியலாயிற்று. நாள் முழுவதும் அதைப்பற்றியே பேசி வந்தாள்; இரவிற் கனவிலும் அவ்வடிவத்தைப் போலவே தனக்கும் பிள்ளை பிறக்குமென்னும் நினைவு அவளுக்கு உண்டாயிற்று. பின்னர்ப் பத்து திங்களும் கழிந்து அவளுக்குப் பிள்ளை பிறந்தது; அப்பிள்ளை, ஐயோ! ஒரு காலோடும் ஒரு கையோடுங் கூடிய வேறுபட்ட வடிவம் வாய்ந்ததாய் இருந்தது.

வ்வாறே சூல் கொண்டிருக்குங் காலங்களில் தாயானவள் எண்ணிய எண்ணங்களும் நினைத்த நினைவுகளும் அவள் வயிற்றகத்தே உள்ள கருவில் எளிதாகப் பதிந்து விடுகின்றன. பெரும்பாலும் நம் பெண்மக்கள் வீண் பேச்சுகளையும் வீணான எண்ணங்களையும் எந்நேரமுங் கையாளுகின்றவர்களாய் இருத்தலால் இவர்களுக்குப் பிறக்கும் L பிள்ளைகளும் இவர்களோடொத்த பலனற்ற தீய தன்மை உடையவர்களாகவும் அறியாமை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள்! பிள்ளைகளுக்குத் தந்தையின் இயற்கை சிறிதாகவுந் தாயின் இயற்கை பெரிதாகவும் பதிவது மேலெடுத்துக் காட்டிய நிகழ்ச்சிகளாற் செவ்வையாகப் புலப்படுதலால் தாய்மார் சூல் காண்டிருக்குங் காலங்களில் தீய நினைவேனுந் தீய செயலேனுந் தம்மிடத் துண்டாவதற்குச் சிறிதும் இடந்தரலாகாது.

இனிக், கருக் கொண்டிருக்கும்போது நல் நினைவும் நற்சொல்லும் நற்செயலும் உண்டாவதற்குச் சிறுபொழுது முதற்கொண்டே அந்நல்வழிகளிற் பழகும் பழக்கம் இன்றி யமையாததாய் இருத்தலிற், பெண்மக்கள் ஒவ்வொருவருந் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/205&oldid=1584452" இலிருந்து மீள்விக்கப்பட்டது