உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

  • அறிவுரைக்கொத்து

191

கலாஷா’, ‘கவர்படி' முதலான இன்னும் எத்தனையோ பலமொழிகளும் வடக்கே பற்பல நாட்டின்கணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. இம்மக்கட் பெருங் கூட்டத்துடனெல்லாம், இந்திமொழியில் ஒன்றை மட்டும் தெரிந்த தென்னாட்டவர் உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே. வடநாட்டவரிலேயே இந்திமொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத்தென்னாட்டவர் மட்டும் இந்தி மொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ்வியல்புகளை யெல்லாம் நடு நின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத்தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாததுந் தெரியாததுமான இந்தி மொழிகளில் ஒன்றை வருந்திக் கற்றலால் வீண் கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் உண்டாகாதென்பது நன்கு விளங்கும்.

காலக்

இனி, இத்தென்னாடு முழுதும், இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான அயல்நாடுகளிலும் பெருந்தொகையினராய் இருக்குந் தமிழ் மக்கள் எல்லாரும் பேசுந் தமிழ்மொழி ஒரே தன்மையினதாய், இந்நாட்டவ ரெல்லாரும் ஒருவரோ டொருவர் உரையாடி அளவளாவுதற் கிசைந்த ஒரே நிலையினதாய் வழங்கா நிற்க, வடநாட்டின்கட் பேசப்படும் இந்தி, உருது முதலான மொழிகளும் அவற்றின் உட்பிரிவான பல சிறு சிறு மொழிகளும் பலப் பல மாறுதல் கள் வாய்ந்தனவாய், ஒருவர் பேசுவது மற்றொருவர்க்குப் புலனாகாதபடி திரிபுற்றுக் கிடப்பது ஏனென்றால், அவ்விருவேறியல்புகளையுஞ் சிறிது விளக்குவாம்.

தமிழ்மொழி பேசுந் தமிழ் மக்கள் விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள த்தென்னாட்டிலும், இதற்குந் தெற்கே யிருந்து பல்லாயிர பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே கடலுள் அமிழ்ந்திப் போன குமரிநாட்டிலும் நாகரிகத்திற் சிறந் தோங்கிய வாழ்க்கையில் இருந்தவர்கள். இற்றைக்கு ஐயாயிர ண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ் மொழியை நன்குகற்ற ஆசிரியர்கள் முதுகுருகு, முதுநாரை, களரியா விரை, பெரும்பரிபாடல், தொல்காப்பியம், பெருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/216&oldid=1584463" இலிருந்து மீள்விக்கப்பட்டது