உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் -17

6

கங்கைக்கும் யமுனையாற்றுக்கும் டை யேயுள்ள நாடுகளின் தெற்கிற் பேசப்படுவது 'கனோஜ்' எனவும், பந்தல்கண்டிலம் நருமதையாற்றை யடுத்த இட டங்களிலும் பேசப்படுவது 'பந்தேலி' எனவுந், எனவுந், தில்லி நகரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பேசப்படுவது ‘உருது' எனவும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வடமேற் பகுதிகளிற் பேசப்படும் இவ்வைந்து மொழிகளும் மேல்நாட்டு இந்தி என்னும் பெரும் பிரிவில் அடங்குவனவாகும்.

L

இனிக், 'கீழ்நாட்டு இந்தி' என்னும் பெரும் பிரிவில் அடங்குவன: அவதி', ‘பகேலி', 'சத்தீஸ்கரி' என்னும் மாழிகளாகும். இம்மூன்று ம்மூன்று மொழிகளுள்ளும் என்பதே முதன்மையுடையதாய் அயோத்தி நாட்டின்கண் வழங்குகின்றது.

அவதி

இனிப், 'பிகாரி' என்னும் பெரும் பிரிவில் அடங்குவன: மைதிலி', ‘போஜ்புரி', 'மககி’ என்னும் மொழிகளாகும். இம்மூன்றனுள் முதன்மை வாய்ந்தது, கங்கையாற்றின் வடக்கே மிதிலைநாட்டில் வழங்கும் 'மைதிலி' என்னும் மொழியேயாகும். இப்போது இந்திமொழி நூல்களென வழங்கப்படுவனவெல்லாம் இந்த மைதிலி மொழியிலேதான் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்திமொழியின் பிரிவு களாக ஆங்காங்கு வடநாட்டின்கட் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்திமொழியின் பல பிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும், ஒருநாட்டவர் மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர் வாழ்ந்து வருதலின், இந்தி அவரெல்லார்க்குந் தெரிந்த பொதுமொழி என்றுரைப் பாருரை எங்ஙனம் பொருந்தும்? எங்ஙனம் உண்மையாகும்? இங்ஙனம் பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பல்வேறு இந்தி மொழிகளில் எதனை இத்தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் அதனுதவி கொண்டு இவர் வடநாட்டவரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்திமொழிகளே யன்றிச், ‘சிந்தி’ லந்தி’, ‘பஞ்சாபி', 'குஜராத்தி', 'ராஜபுதானி', 'குமோனி' கடுவாலி’, ‘நேபாலி', "உரியா', 'பங்காளி', 'மராட்டி’, ‘சிணா’, காஸ்மீரி', 'கோகிஸ்தானி', 'சித்ராலி', 'திராகி’, ‘பஷை’,

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/215&oldid=1584462" இலிருந்து மீள்விக்கப்பட்டது