உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

189

வறுமையில் வருந்திக் காலங்கழிக்கும் நம் எளிய மக்களுக்கு, அவர் சிறிதும் அறியாத இந்திமொழியைக் கட்டாயப் பயிற்சி யாக வைக்கப் பெரிது முயல்வது, உமிக்குற்றிக் கைசலிப்ப தாய் முடியுமே யல்லாது, அதனால் ஒரு சிறுபயன்றானும் விளையமாட்டாது.

அற்றன்று, இவ்விந்தியதேயத்தின் பற்பல நாடுகளிலும் உயிர்வாழும் மாந்தர்கள் பற்பல மொழிகளைப் பேசுவாராய் இருத்தலின், இந்நாட்டவரெல்லாரும் ஒரு பொதுநன்மை யின் பொருட்டு ஒருங்கு கூடிப் பேச வேண்டிய காலங்களில் இந்தியை அவரெல்லாரும் பொதுமொழியாய் கையாளு ளு தலே நன்று; ஏனென்றால், இத்தென்னாட்டவரைவிட வடநாட்டவர் தொகையே மிகுதியாயுள்ளது; அவ்வாறு மிகுதி யாயுள்ள வடநாட்டவரிற் பெரும்பாலோர் இந்தி மொழியையே பேசுதலின், அவரோடொப்பத் தன் னாட்டவரனைவரும் இந்திமொழியைக் கற்றுப் பேசுதலே நன்மைக்கிடமாகுமென்று தேயத்தொண்டர் சிலர் கூறு கின்றனர். இவரது கூற்றுப் பொருந்தா தென்பது காட்டுவாம். இந்தி பொதுமொழி யன்று

ரு

இந்தி ந்தி மொழியானது வடநாட்டவரெல்லாராலும் பொதுமொழியாக வைத்துப் பேசப்படுகின்றதென்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின் ற தே யல்லாமல், அஃதெங்கும் ஒரேவகையாகப் பேசப்பட வில்லை. அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை, அதற் கடுத்த நாட்டிலுள்ளார் தெரிந்துகொள்ள மாட்டாதவரா யிருக்கின்றனர். இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை ‘மேல்நாட்டு இந்தி”, “கீழ்நாட்டு இந்தி’, ‘பிகாரி’ என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகவும் அப்பெரும் பிரிவு களினுள்ளே இன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத் திருக்கின்றனர். கங்கையாற்றுக்கு மேற்கே பஞ்சாப்பின் தென்கிழக்கில் மேட்டுப் பாங்கான ஊர்களிற் பேசப்படுவது 'பாங்காரு' எனவும், வடமதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பேசப்படுவது, 'பிரஜ்பாஷா' எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/214&oldid=1584461" இலிருந்து மீள்விக்கப்பட்டது