உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் -17

அவை

இங்ஙனமாகத், தமிழ் முதலிய தாய்மொழிப் பயிற்சிக்கென்று தனிப் பள்ளிக்கூடங்களுந் தனிக் கல்லூரிகளும் இல்லாமை யால், பொருள் வருவாய் ஒன்றனையே கருதி நாடெங்கு முள்ள ஆங்கிலக் கல்விக் கழகங்களில் ஆங்கிலத்தையே விரும்பிக் கற்று, அதனுடன் சேர்த்துப் பயின்ற தாய்மொழிப் பயிற்சியில் விருப்பமுந் தேர்ச்சியுமில்லாமல், யில்லாமையால் தம் நாட்டவரைக் கல்வியறிவில் மேலேற்றும் எண்ணமுஞ் சிறிதுமே யில்லாதார் தொகையே பெருகிவரும் இந்நாளில், இத்தமிழ்நாட்டிலும், பிறமொழி பேசும் பிற நாடுகளிலும் அயல்மொழியான இந்திமொழிப் பயிற்சியை நுழைத்தால் அதனாற் பயன் விளையுமோ என்பதனை அறிஞர்கள் ஆழ்ந்தாராய்ந்து பார்த்தல் வேண்டும்.

ஆங்கிலம்போல் இந்தியும் அயல்மொழியே

இப்போது, அயல்மொழியான ஆங்கிலத்தைக் கற்றார் தாகை இந்நாட்டில் மிகுதியாயிருந்தும், அவரால் இந் நாட்டுக் கல்லாமாந்தர்க்குந் தாய்மொழி கற்றார் சிலர்க்கும் ஏதொரு பெரும்பயனும் விளையாதிருக்க, ஆங்கிலத்தை யொப்பவே அயல் மொழியான இந்தியை மட்டும் இனி நம்மவரிற் சிலர் கற்று வந்தாற் பெருங்கூட்டத்தினரான நம் ஏழை மக்கட்கு அவரால் நன்மை உண்டாகிவிடுமோ? ஆங்கிலங் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை யறியாமல் நம் ஏழைமக்கள் திகைத்து விழிப்பது போலவே, இந்தி மொழியைக் கற்றவர் நம்மக்களிடையே இந்தியிற் பேசினால் அவர் அதன் பொருளையறியாமல் திகைத்து விழிப்பரென்பதை நாஞ் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே, இவ்விந்திய தேயத்திற் பலநாடுகளில் பல வேறு மொழிகளைப் பேசுவாரான பல்வேறு மக்கட் குழுவினர்க் கும் உண்மையாகவே நன்மை செய்யும் எண்ணமும் நன் முயற்சியும் உடைய தொண்டர்கள் இருந்தால், அவர் அவ் வந்நாட்டினருந் தாந்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் நல்லறிவுபெற்று முன்னேற்றம் அடையும் படி உதவி செய்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்வதை விட்டுத், தந் தாய்மொழியையே கல்லாத பேதைகளாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/213&oldid=1584460" இலிருந்து மீள்விக்கப்பட்டது