உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

187

இரங்கத்தக்க இன்னாநிலையைப்பற்றி வேறு சொல்ல வேண்டுவது யாது உளது?

ஆங்கில அரசு இந்நாட்டுக்கு வந்தபின், ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இத்தென்னாடு நாடு எங்கணும் ஆயிரக்கணக்காகத் திறப்பிக்கப்பட்டு, ஆங்கிலமும் அதனுடன் சேர்த்துத் தமிழ் முதலான அவ் வத்தேய மொழிகளும் நம் இந்து மக்கட்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், பொருள் வருவாய்க்குந் தற்பெருமை வாழ்க்கைக்குங் கருவியாய் இருத்தல்பற்றி, ஆங்கில மொழியைப் பெருந்தொகையினரான நம்மக்கள் பெரும் பொருட் செலவு செய்து விரும்பிக் கற்பதுபோல, ஆங்கிலத் துடன் சேர்ந்து ஒருநாளில் ஒரு சிறிது நேரமே கற்பிக்கப்படுந் தமிழ் முதலான நாட்டுமொழிகளை விரும்பிக் கற்பார் ஒரு சிலரையேனும் எங்குங் காண்கிலேம். அதனால், ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளிற் கற்றுத் தேறிவரும் மாணாக்கர்கள் தமிழ் முதலான நாட்டுமொழிகளிற் பிழையின்றி எழுதவும் பேசவும் வன்மையில்லாதவர் களாகவும், நாட்டு மொழிகளில் உள்ள நூல்களிற் சிறந்த பயிற்சியில்லாதவர்களாகவும் அதனால், தாம் ஆங்கிலத்திற் கற்றறிந்த அரிய நூற்பொருள்களை ஆங்கிலந் தெரியாத தம் இனத்தார்க்குந் தம் நாட்டார்க்கும் எடுத்துச்சொல்ல மாட்டாதவர்களாகவுந் தம் வயிறு கழுவும் வெற்றுயிர் வாழ்க்கையிலேயே வாணாட் கழித்து வருகின்றனர். ஆகவே, ஆங்கிலக் கல்விக்கழகங்களிற் கல்வி பயின்று வெளிவரும் நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் பொருள் வருவாய்க்கு வேண்டுமளவு சிறிது ஆங்கிலம் பயின்ற வராயும், அதனொடு சேர்த்துச் சிறிதே கற்பிக்கப்பட்ட தமிழ் முதலான மொழி களைத் தப்புந் தவறுமாய் பேச எழுதத் தெரிந்தவராயும் வெறும் போலி வாழ்க்கையிற் சில்லாண்டுகளே உயிர்வாழ்ந்

தாழிதலால், இந்நாட்டின்கட் பெருந்தொகையினராய் வெற்றுயிர் வாழ்க்கை செலுத்துங் கல்லாமாந்தர்க்குந், தமிழ் முதலான நாட்டுமொழிகளை வருந்திக்கற்றும் வறியராய்க் கார்த்திகைப்பிறைபோல் ஆங்காங்கு சிதறிச் சிற்சிலராய்க் காலங்கழிக்குந் தாய்மொழி கற்ற மாந்தர்க்கும் ஆங்கிலங் கற்றவரால் மிகுதியான பயன் ஏதும் விளைகின்றிலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/212&oldid=1584459" இலிருந்து மீள்விக்கப்பட்டது